33.8 கோடி பேருக்கு வேக்சின்.. இந்தியா புதிய மைல்கல்.. தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு? முழு டேட்டா
டெல்லி: இந்தியாவில் இதுவரை மொத்தமாக 33,81,20,261 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 1.61 கோடி பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் வேக்சின் கொள்கையை ஒன்றிய அரசு மாற்றியுள்ளது. 18+ வயது கொண்ட எல்லோருக்கும் வேக்சினை இலவசமாக ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் வேக்சினை மாநில வாரியாக பிரித்து கொடுத்து வேக்சின் வழங்கி வருகிறது.
தினசரி உற்பத்தியாகும் கோவிஷீல்ட், கோவாக்சின் இரண்டும் மாநில வாரியாக பிரித்து கொடுக்கப்படுகிறது. வடமாநிலங்களில் வேக்சின் போடும் வேகம் அதிகரித்துள்ளது.

எத்தனை
இந்தியாவில் இதுவரை மொத்தமாக 33,81,20,261 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. 27,80,87,058 பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் மட்டுமே போடப்பட்டுள்ளது. 6,00,33,203 பேருக்கு மட்டுமே இந்தியாவில் இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க அதிகாரபூர்வ கணக்குப்படி 39,272 வேக்சின் மையங்கள் உள்ளன.

மையங்கள்
37,234 அரசு வேக்சின் மையங்கள் நாடுகள் முழுக்க ஒன்றிய அரசு கணக்குப்படி செயல்படுகிறது. 2,038 தனியார் மருத்துவமனைகள் வேக்சின் போட்டு வருகின்றன. இந்தியாவில் தினசரி சராசரியாக 300000-500000 பேருக்கு வேக்சின் போடப்பட்டு வருகிறது .

ஆண்கள் பெண்கள்
18,16,91,385 ஆண்களுக்கு நாடு முழுக்க குறைந்தது ஒரு டோஸ் வேக்சினாவது போடப்பட்டுள்ளது. 15,63,73,186 பெண்களுக்கு நாடு முழுக்க குறைந்தது ஒரு டோஸ் வேக்சினாவது போடப்பட்டுள்ளது. 29,66,42,383 கோவிட்ஷீல்ட் டோஸ்கள் இதுவரை போடப்பட்டுள்ளன. 4,13,78,876 கோவாக்சின் டோஸ்கள் நாடு முழுக்க போடப்பட்டுள்ளன.

மாநில வாரியாக
இந்தியாவிலேயே அதிகமாக மகாராஷ்டிராவில் 3,29,72,114 பேருக்கு வேக்சின் போடப்பட்டள்ளது.
உத்தர பிரதேசம் - 3,19,61,893 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது
குஜராத் - 2,61,87,813
ராஜஸ்தான் - 2,48,64,435
கர்நாடகா - 2,30,98,976
மேற்கு வங்கம் - 2,22,32,181
மத்திய பிரதேசம் - 2,13,23,031
பீகார் - 1,64,26,281
ஆந்திர பிரதேசம் - 1,62,21,994
தமிழ்நாடு - 1,61,16,210
கேரளா - 1,44,54,445
ஒடிசா - 1,20,78,259
தெலுங்கானா - 1,13,98,883 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் 1,61,16,210 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. 1,34,73,369 பேருக்கு தமிழ்நாட்டில் ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. 26,42,841 பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. இன்று இதுவரை 2,15,641 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1,647 அரசு மையங்களிலும், 135 தனியார் மையங்களிலும் வேக்சின் போடப்பட்டு வருகிறது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications