ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்காமல் நைசாக நழுவிய இந்திய கப்பல்.. புதிய ரூட்டை பிடித்து பயணம்! ஆஹா
டெல்லி: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில் பதிலுக்கு ஈரானும் அமெரிக்காவின் வளைகுடா நாடுகளில் உள்ள தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் உலகில் எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியையும் ஈரான் தனது கட்டுக்குள் வைத்துள்ளது. இந்த சூழலி, ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க புதிய ரூட்டை பிடித்து இந்தியா உள்பட 4 கப்பல்கள் நைசாக கடந்து வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கி வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள முக்கியமான கட்டமைப்புகளையும் தாக்கி வருகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி
இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றொரு பக்கம், உலகில் எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியையும் ஈரான் தனது கட்டுக்குள் வைத்துள்ளது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி எனவும் அமெரிக்கா மற்றும் எதிரி நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதியில்லை என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
அனுமதி பெறாமல் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்றால் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளது. அதேபோல, ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு ரூ.18 கோடி அளவிற்கு சுங்க கட்டணம் வசூலிக்கவும் ஈரான் திட்டமிட்டுள்ளது. ஈரானின் இத்தகைய நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
4 கப்பல்கள் கடந்து வந்ததாக
கச்சா எண்ணெய் விலை ஏறியது மட்டுமின்றி தட்டுப்பாடு ஏற்படும் சூழலும் உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் கடும் கெடுபிடிகளை தாண்டி அவ்வப்போது சில கப்பல்கள் கடந்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க புதிய ரூட்டை பிடித்து இந்தியா உள்பட 4 கப்பல்கள் நைசாக கடந்து வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரபல ஆங்கில தொலைக்காட்சியான என்.டி.டி.வி இதனை வெளியிட்டுள்ளது. இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது:-
மார்ஷல் தீவுகள் கொடியுடன் வந்த ஹாப்ருட் மற்றும் டால்கட் எனும் இரண்டு மிகப் பெரிய கச்சா எண்ணெய் கப்பல்கள்; மற்றும் பனாமா கொடியுடன் இயங்கும் சோஹர் (Sohar) LNG கப்பல் ஆகியவை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் ராஸ் அல் கைமா நகரத்திற்கு அருகில் உள்ள ஓமன் நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைந்தன. அவை முஸந்தம் தீபகற்பம் அருகில் சென்றபோது, தங்களது இருப்பிடத்தை தெரிவிக்கும் சிக்னல் அனுப்பும் டிரான்ஸ்பாண்டர்களை அணைத்தன. ஏப்ரல் 3 ஆம் தேதி, இந்தக் கப்பல்கள் மஸ்கட் கடற்கரையிலிருந்து சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் காணப்பட்டன.
எப்படி கடந்தது?
கடல் போக்குவரத்து ஆய்வு நிறுவனம் TankerTrackers தரவுகளின் படி, டால்கட் கப்பலில் சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய் மற்றும் ஹாப்ருட் கப்பலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் கச்சா எண்ணெய் தலா சுமார் 20 லட்சம் பேரல்கள் ஏற்றப்பட்டிருந்தன. சோஹர் கப்பல் மார்ச் 21 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் அல் ஹம்ரியாஹ் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. ஆனால் அது ஏதேனும் சரக்குகளை ஏற்றிச் சென்றதா என்பது தெளிவாக தெரியவில்லை.
இந்த மூன்று கப்பல்களுக்கு பின்னால், இந்தியக் கொடியுடன் பயணித்த ஒரு சரக்கு கப்பலும் சென்றது. அதன் சிக்னல்களின் அடிப்படையில் அது எம்.எஸ்.வி கியுபா எம்.என்.வி 2183 (MSV Quba MNV 2183) என அடையாளம் காணப்பட்டது. இந்தக் கப்பல் மார்ச் 31 அன்று துபாயிலிருந்து புறப்பட்டுள்ளது. ஓமான் நாட்டின் டிப்பா துறைமுகத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலில் தனது கடைசி இருப்பிடத்தை காட்டியது.
அந்தக் கப்பலில் சரக்கு ஏற்றப்பட்டிருந்ததா அல்லது அது எங்கு சென்றுகொண்டிருக்கிறது என்பது தெளிவாக இல்லை. இந்த நான்கு கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தி கடக்க சர்வதேச கடல் பரப்பை பயன்படுத்தாமல் ஓமன் நாட்டின் பிராந்தியத்திற்குட்பட்ட கடலை ஒட்டி பயணித்து கடந்துள்ளன.
-
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
குவைத் ஏர்போர்ட்டில் துடிதுடித்து உயிரிழந்த இந்தியர்.. ஈரானின் ட்ரோன் தாக்குதலில் பயங்கரம்! திக்திக் -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications