பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரத்திற்கு இந்தியா ஒதுக்கிய தொகை.. சீனா-அமெரிக்காவுடன் எவ்வளவு வித்தியாசம்?
டெல்லி: மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்தியாவில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியா தனது பட்ஜெட்டில் தாக்கல் முக்கிய துறைகளுக்கு ஒதுகப்பட்டுள்ள தொகை எவ்வளவு என்பதையும் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் அதே துறைக்கு எவ்வளவு ஒதுக்கியுள்ளன என்பது பற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம.
இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை நாடும், ஐந்தாவது பெரிய பொருளாதார நாடு என்ற பெருமையை பெற்றது. உலக அளவில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள இந்தியா, வரும் 2047 ஆம் ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகிறது. அதற்கு ஏற்றபடியே திட்டங்களை வகுத்து வருவதாக மத்திய அரசு கூறி வருகிறது.

இதனால் இந்தியா தாக்கல் செய்யும் பட்ஜெட் உலக அளவில் கவனம் பெறுவது வழக்கம். இந்தியாவில் ஆண்டு தோறும் பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அந்த வகையில், இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது மூன்றாவது ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யும் முதல் முழு பட்ஜெட் இதுவேயாகும்.
எனவே இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அந்த வகையில், பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. இந்தியா முக்கிய துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கியது என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
இந்திய பட்ஜெட் 2025 -2026:
* கல்வித் துறைக்கு 1,28,650 கோடி ரூபாய்
* சுகாதாரத் துறைக்கு 98,311 கோடி ரூபாய்
* உள்துறைக்கு 2,33,211 கோடி ரூபாய்
* ஐடி மற்றும் டெலிகாம் துறைக்கு 95,298 ரூபாய்
* கிராமப்புற வளர்ச்சிக்கு 2,66,817 கோடி ரூபாய்
* நகர்ப்புற வளர்ச்சிக்கு 96,777 கோடி ரூபாய்
* போக்குவரத்துக்கு 5,48,649 கோடி ரூபாய்
* எரிசக்த்து துறைக்கு 81,174 கோடி ரூபாய்
அமெரிக்க பட்ஜெட் (2025):
அமெரிக்காவில் மொத்த பட்ஜெட்டின் மதிப்பு சுமார் 6 டிரில்லியன் டாலர் ஆகும். இதில் பாதுகாப்பு துறைக்கு மட்டும் சுமார் 886 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பிற்காக 1.3 டிரில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மருத்துவ உதவிக்கு என்று 1.5 டிரில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்காக அமெரிக்கா சுமார் 1.6 டிரில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்துள்ளது.
சீனா பட்ஜெட்:
* கல்வித்துறை - 290 பில்லியன் டாலர்
* சமூக நலம் மற்றும் வறுமை ஒழிப்பு - 70 - 100 பில்லியன் டாலர்
* பொது பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கம் - சுமார் 30 - 45 பில்லியன் டாலர்
* சுகாதாரம் - சுமார் 160 - 190 பில்லியன் டாலர் ஆகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications