பின்தங்கிய தமிழகம்.. இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியல் வெளியீடு.. முதலிடம் ‘நவிமும்பை'

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் தூய்மை நகரங்களின் பட்டியல் அடையாளம் காணப்பட்டு விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-26ம் ஆண்டுக்கான தூய்மை நகரங்களின் பட்டியலில் கடந்த 8 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வந்த இந்தூரை பின்னுக்கு தள்ளி நவி மும்பை மகுடம் சூடியுள்ளது. இதற்கு அடுத்ததாக குஜராத்தின் சூரத் 2வது இடத்தையும், ஆந்திராவின் விஜயவாடா 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

navi-mumbai-is-the-cleanest-city-in-inida-in-the-super-swachh-lague-category-of-annual-swachh-survek

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் சார்பில் 2016 ஆம் ஆண்டு முதல் தூய்மை நகரங்கள் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் வாழும் நகரங்களை தூய்மையா வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பட்டியல் வெளியிடப்பட்டு அந்தந்த நகரங்களுக்கு விருது, ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் 'ஸ்வச் சர்வேக்‌ஷன்' (Swachh Survekshan) விருதுகள் 2025-26 இன்று வழங்கப்பட்டன. டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் இன்று நடந்த 10வது விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்று விருதுகளை வழங்கினார். பல்வேறு பிரிவுகளில் தேர்வான தூய்மை நகரங்களின் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் இந்த விருதுகளை பெற்று கொண்டனர்.

அதன்படி 2025-26ம் ஆண்டுக்கான தேசிய அளவில் தூய்மை நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை நவி மும்பை பெற்றுள்ளது. இதற்கான விருதை நவி மும்பை மாநகராட்சி ஆணையர் கைலானஷ் ஷிண்டே மற்றும் மேமயர் சுஜாதா பட்டீல் ஆகியோர் பெற்று கொண்டனர். இதில் 2வது இடத்தை குஜராத்தின் சூரத் மற்றும் 3வது இடத்தை ஆந்திராவின் விஜயவாடா உள்ளிட்ட நகரங்கள் பிடித்துள்ளன.

கடந்த முறை இந்த பட்டியலில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்தது. கடந்த 8 ஆண்டுகளாக இந்தூர் முதலிடம் பிடித்து வந்த நிலையில் இந்த முறை பின்தங்கி உள்ளது. கடந்த முறை நவி மும்பை 3வது இடத்தை பிடித்தது. ஆனால் இந்த முறை இந்தூரை பின்னுக்கு தள்ளி நவி மும்பை முதலிடத்தை எட்டிப்பிடித்து சாதித்துள்ளது. இந்த முறை இந்தூர் 8 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதேபோல் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் ஆந்திராவின் விசாகப்பட்டினம் தூய்மையான நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் லக்னோ ஆகிய நகரங்கள் உள்ளன.

3 லட்சம் முதல் 10 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட நகரங்களில் தூய்மையான நகரமாக மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் முதலிடத்தை பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து 2வது இடத்தில் சண்டிகர், 3வது இடத்தில் ஆந்திராவின் குண்டூர் ஆகிய நகரங்கள் உள்ளன.

மேலும் ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள தூய்மையான நகரங்களின் பட்டியலில் மத்தியப் பிரதேசத்தின் ரேவா முதலிடத்தை பெற்றுள்ளது. சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் 2ம் இடத்தையும், உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி 3ம் இடத்தையும் பிடித்துள்ளது.

அதேபோல் இமயமலை பகுதியில் அமைந்துள்ள தூய்மையான நகரமாக உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ராபூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 2வது இடத்தை ஜம்மு காஷ்மீரும், 3வது இடத்தை ஜம்மு காஷ்மீரில் உள்ள ஷோபியான் நகரும் பிடித்துள்ளது.

தூய்மையான கடலோர நகரங்களை எடுத்து கொண்டால் டிசாவின் பூரி முதலிடத்தைப் பிடித்துள்ளது. கேரளாவின் ஆலப்புழா 2வது இடத்தையும், மகாராஷ்டிராவின் ரத்னகிரி 3வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் டாப் 3 இடங்களில் தமிழகத்தின் ஒரு நகரம் கூட இடம்பெறவில்லை என்பது சோகமான விஷயமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+