Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி விமான டிக்கெட் கட்டணம் இதுதான்.. மளமளவென குறைத்த மத்திய அரசு.. எந்தெந்த கிமீ எவ்வளவு? முழு லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இண்டிகோ விமானங்கள் அதிகளவில் ரத்தாகி உள்ளதால் பிற விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தை அதிகளவில் உயர்த்தி உள்ளன. இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. விமான கட்டணங்களுக்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 500 கிமீ தொலைவு வரையிலான பயணத்துக்கான விமான கட்டணம் ரூ.7,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய முழு விவரம் வருமாறு:

இண்டிகோ விமான நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமான சேவைகளை இயக்கி வருகிறது. இந்நிலையில் தான் கடந்த 2ம் தேதி முதல் இன்று வரை இண்டிகோ விமான சேவை பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.

நேற்று ஒரே நாளில் 1,00க்கும் அதிகமான விமானங்கள் ரத்தாகின. இன்று குறைந்தளவில் இண்டிகோ விமானங்களை இயக்கி வருகிறது. இந்த விமான சேவைகள் இயல்பு நிலைக்கு வருவதற்கு இன்னும் 5 முதல் 10 நாட்கள் வரை ஆகும் என்று இண்டிகோ அறிவித்துள்ளது.

indigo-crisis-union-aviation-ministry-caps-airfares-from-rs-7-500-to-rs-18-000

இதனை சாதகமாக பயன்படுத்தி பிற விமான நிறுவனங்கள் தங்களின் டிக்கெட் கட்டணத்தை பலமடங்கு வரை உயர்த்தி உள்ளன. சென்னை - கோவை விமான கட்டணம் ரூ.60 ஆயிரமாக உயர்ந்துள்ளது. வழக்கமாக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4,500 வரை விமான கட்டணம் இருக்கும் நிலையில் பலமடங்கு வரை அதிகரித்துள்ளது.

அதேபோல் இன்னும் பல ரூட்களுக்கான விமான கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். விமான நிறுவனங்கள் தங்களின் கட்டணங்களை குறைக்க வேண்டும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் கோரிக்கை வைத்தது. ஆனால் விமான நிறுவனங்கள் கேட்கவில்லை. தொடர்ந்து அதிக கட்டணங்களை டிக்கெட்டுக்கு நிர்ணயம் செய்து வருகிறது.

இந்நிலையில் தான் உள்நாட்டு விமானங்களுக்கான டிக்கெட் கட்டணத்தில் உச்ச வரம்பை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நிர்ணயம் செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛விமான பயணிகளுக்கு சிரமத்தை தடுக்கும் வகையில் உள்நாட்டு விமான கட்டணங்களுக்கு உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 500 கிலோமீட்டர் தொலைவு வரையிலான பயணத்துக்கு ரூ.7,500 டிக்கெட் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 500 - 1000 கிலோமீட்டர் தொலைவு வரையிலான பயணத்துக்கு ரூ.12,500 டிக்கெட் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், 1,000 - 1,500 கிலோமீட்டர் தொலைவு வரையிலான பயணத்துக்கு ரூ.15,000 டிக்கெட் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,500 கிலோமீட்டருக்கு மேலான பயணத்துக்கு ரூ.18,000 டிக்கெட் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கட்டணத்தில் வரி- சேவை கட்டணம் அடங்காது. அதேபோல் ‛பிசினஸ் கிளாஸ்' பிரிவுக்கு உச்சவரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இண்டிகோ விமான சேவை சரியாகும் வரை இந்த கட்டணம் அமலில் இருக்கும்.

இதனை அனைத்து விமான நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும். இந்த கட்டண முறையை மீறி ஏதேனும் விமான நிறுவனம் அதிகப்படியான கட்டணத்தை டிக்கெட்டுக்கு வசூலித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்
'' என கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+