இன்டிகோ விமானிக்கு பளார் விட்ட பயணி.. அதிர்ந்த பணிப்பெண்.. எச்சரிக்கும் ஜோதிராதித்ய சிந்தியா
டெல்லி: விமானம் புறப்படுவதற்கு தாமதமானதையடுத்து இன்டிகோ விமானத்தின் விமானியை பயணி ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் பயணிகள் அத்து மீறி நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 110 விமானங்கள் தாமதமாகியுள்ளது. 79 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று டெல்லியில் இருந்து கோவா செல்லவிருந்த விமானம் கடும் பனிமூட்டத்தால் பல மணி நேரம் தாமதமாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட வந்த விமானியை பயணி ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார்.

விமானியை பயணி தாக்கும் வீடியோவை விமானத்தில் இருந்து பயணி ஒருவர் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ, தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கடும் பனிமூட்டத்தால் விமானம் பல மணி நேரம் தாமதமானதை தொடர்ந்து, பணியில் இருந்த விமானக் குழுவினருக்கு பதிலாக ஷிப்ட்க்கு புதிய விமானக் குழுவினர் வந்துள்ளனர். அப்போது மஞ்சள் நிற ஹூடி அணிந்த நபர் திடீரென கடைசி வரிசையில் இருந்து ஓடி வருவதும் விமானத்தின் இணை விமானி அனுப் குமாரை அவர் தாக்குவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டதற்கு எத்தனை மணி நேரமாக நாங்கள் காத்திருப்பது என்று கோபத்தோடு கேட்டுக்கொண்டே மீண்டும் சண்டையிடுகிறார் அந்த பயணி. விமானம் தாமதமானதற்காக பயணி ஒருவர் விமானியை தாக்கியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சம்பவம் நடந்த உடனேயே, விமானத்தில் இருந்த அந்த பயணி வெளியேற்றப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரது பெயர் சாஹில் கட்டாரியா என்பது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, விமானி அவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். விமான நிறுவனம் தற்போது வழக்கு பதிவு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. விமானத்தில் பயணிகள் அத்து மீறி நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீப காலமாக, விமானத்தில் தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பிரச்னையாக மாறி, விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது. இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது.
-
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications