தவியாய் தவித்த விமான பயணிகள்! ஆக்ஷனில் மத்திய அரசு! DGCA அலுவலகத்தில் ஆஜரான இண்டிகோ சிஇஓ!
டெல்லி: இண்டிகோ விமானங்கள் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் நிறுத்தப்பட்டதால், ஏராளமான விமான பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர். இந்நிலையில், இது தொடர்பான விசாரணையை சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தொடங்கியுள்ளது. தற்போது இயக்குநரக அலுவலகத்தில் இண்டிகோ சிஇஓ ஆஜராகியுள்ளார்.
உள்நாட்டில் இயக்கப்பட்ட ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், மற்ற விமானங்களின் கட்டணமும் அதிகரித்தது. இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில், சிவில் விமான போக்குவரத்து இயக்குநரக அலுவலகத்தில் இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் ஆஜராகியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவையடுத்து விமானிகள் மற்றும் விமான பணியாளர்களுக்கு புதிய விதிமுறைகள் சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த விதிகளை அமல்படுத்த மத்திய அரசு ஏறத்தாழ 2 ஆண்டுகள் வரை, விமான நிறுவனங்களுக்கு டைம் கொடுத்திருந்தன. ஆனால் இண்டிகோ இந்த விதிமுறையை அமல்படுத்தவில்லை. மாறாக, விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்று அடம் பிடித்தது. மத்திய அரசு விட்டுக்கொடுக்கவில்லை. இப்படி இருக்கையில் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் தினந்தோறும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். பயணிகளின் உடமைகள் நாள் கணக்கில் விமான நிலையத்திலேயே தேங்கி கிடக்கின்றன.
விமானங்கள் எவ்வளவு நேரம் விமானத்தை இயக்க வேண்டும்? குறிப்பாக இரவு நேரங்களில் எவ்வளவு முறை விமானங்களை தரையிறக்கலாம்? விமான பணியாளர்களின் பணி நேரம் என்ன? என்பதை புதிய விதிமுறை வரையறுத்திருந்தது. இந்த விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் எனில், கூடுதலான பணியாட்கள் அவசியம். இருக்கிற ஆட்களை கொண்டே காலத்தை ஓட்டிவிடலாம் என்று இண்டிகோ நினைத்திருந்தது. இதனால் போதுமான விமானிகள் இல்லாமல் விமானங்கள் ரத்தாகின.
விமான பயணிகள் கொந்தளிப்படைந்த நிலையில், தற்போதைக்கு விதிகளை அமல்படுத்துவதிலிருந்து தற்காலிகமாக விடுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது பிப்ரவரி மாதம் வரை விதிகளை அமல்படுத்த வேண்டியதில்லை. இருப்பினும் இண்டிகோ விமான போக்குவரத்து இன்னம் சீரடையவில்லை. எனவே இது தொடர்பாக தற்போது சிவில் விமான போக்குவரத்து இயக்குநரக அலுவலகத்தில் இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் ஆஜராகியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications