இரும்பு தூண் விழுந்து.. அப்பளமாய் நொறுங்கிய ஹூண்டாய் கிரெட்டா! சமாஜ்வாதி தலைவருக்கு நேர்ந்த சோகம்
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப் நகரில், சுமார் 4 டன் எடை கொண்ட இரும்பு தூண் விழுந்ததில், ஹூண்டாய் கிரெட்டா கார் அப்பளம் போல நொறுங்கியது. இதில் பயணித்த சமாஜ்வாதி தலைவர் லால் பகதூர் யாதவ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இன்று காலை லால் பகதூர் யாதவ் தனது வீட்டிலிருந்து சில நூறு மீட்டர் தொலைவில், பிரதாப்கர் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது சுமார் 65 அடி உயரமும், 4 டன் எடையும் கொண்ட மின்கம்பம் கிரேன் மூலம் நிறுத்தப்பட்டபோது, அதைப் பிடித்திருந்த கம்பி அறுந்தது. அந்த கம்பம் யாதவின் கார் மீது நேராக விழுந்து, பெரும் சேதத்தையும் படுகாயங்களையும் ஏற்படுத்தியது.

கம்பம் விழுந்த சத்தத்தைக் கேட்டு, அருகிலிருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சேதமடைந்த வாகனத்திலிருந்து யாதவை மீட்டனர். உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் சில வினாடிகளுக்குள் திடீரென நடந்ததாகவும், விரைந்து செயல்ப போதுமான நேரம் கிடைக்கவில்லை என்றும் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.
கட்டுமான பொருட்கள் விழுந்த விபத்துக்கள் நடப்பது இது முதல்முறை கிடையாது. மும்பையில் சில நாட்களுக்கு முன்பு இதேபோன்ற ஒரு தூண் விழுந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டிருந்தது. இது போன்ற விபத்துக்கள் பொது இடங்களுக்கிடையே நடைபெறும் கட்டுமான மற்றும் பராமரிப்பு பணிகளில் பாதுகாப்பு நெறிமுறைக்ள பின்பற்றப்படுகிறதா? என்கிற கேள்வியை எழுப்பியிருக்கின்றன.
இன்று காலை நடந்த விபத்தில் உயிரிழந்த லால் பகதூர் யாதவ், 48 வயதானவர். அவர் சமாஜ்வாடி கட்சியின் உள்ளூர் தலைவராக பணியாற்றி வந்தார். கடந்த காலத்தில் உள்ளாட்சித் தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார். அவருக்கு மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். தனது சமூகத்தில் சுறுசுறுப்பாக இயங்கிய ஒருவராகவும், அனைவராலும் மதிக்கப்பட்டவராகவும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அவரை நினைவு கூர்ந்தனர். அவரது திடீர் மறைவு அப்பகுதியில் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications