"சில் செய்யும் பாட்டிகள்.." ஸ்கேட்டிங் வேற.. அடேங்கப்பா.. ஸ்டன் ஆன நெட்டிசன்கள்.. வேலையை காட்டிய ஏஐ
டெல்லி: ஏஐ தொழில்நுட்பம் இப்போது வேற லெவவுக்கு சென்று வரும் நிலையில், இணையத்தில் இப்போது சில படங்கள் டிரெண்டாகி வருகிறது. பாட்டிகள் ஸ்கேட்டிங் செய்யும் அந்த படம் இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இந்த தலைமுறை சந்தேகமே இல்லாமல் ஏஐ தொழில்நுட்பத்திற்கானது என்பதே வல்லுநர்கள் கூறும் கருத்தாக இருக்கிறது. ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது சமீப காலத்தில் வேற லெவலுக்கு சென்றுள்ளது.

அதிலும் குறிப்பாக இந்த சாட் ஜிபிடி வரவு என்பது அடுத்த லெவலுக்கு ஏஐ கருவியை எடுத்துச் சென்றுள்ளது. நாம் எந்தவொரு கேள்வி கேட்டாலும் நொடிகளில் துல்லியமான பதில் வரும்.
ஏஐ கருவிகள்: கேள்விகள் மட்டுமில்லை. ஏதாவது கவிதை கேட்டால் கவிதை எழுதித் தரும். ஜோக் கேட்டால் ஜோக் சொல்லும்... அவ்வளவு ஏன் கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான கட்டுரைகளைக் கூட இது நொடிகளில் எழுதித் தரும்.. அந்தளவுக்கு ஏஐ கருவிகளின் வளர்ச்சி என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. நாம் ஏஐ கருவிகளுக்கான காலத்தில் வாழ்கிறோம் என்பதைச் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம்.

ஏஐ வல்லுநர்கள் இந்த சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி யதார்த்தமான மற்றும் பிரமிக்க வைக்கும் கலைப் படைப்புகளை வேற லெவலில் உருவாக்கி வருகின்றனர்.. இது இணையத்தில் அடிக்கடி பெரும் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது மீண்டும் நடந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த ஆஷிஷ் ஜோஸ் உருவாக்கியுள்ள இந்தப் படம் போலியானது என்று சொன்னால் நிச்சயம் யாரும் நம்ப மாட்டார்கள்.
பாட்டிகள்: அவர் வயதான பெண்கள் தெருவில் ஸ்கேட்டிங் போர்டில் சறுக்கிச் செல்வது போன்ற ஹைப்பர்- ரியலிஸ்டிக் படங்களை ஏஐ கருவியைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர்.. மிட்ஜர்னி என்ற ஏஐ செயலியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த படங்கள், பெண்கள் ரோலர் ஸ்கேட்களில் சில் செய்து மகிழ்வது போல இருக்கிறது. புடவை அணிந்துள்ள வயதான பெண்கள், இப்படி சில் செய்யும் படங்கள் தான் இணையத்தை இப்போது கலக்கி வருகிறது.
'ஸ்கேட்டிங் செய்யும் பாட்டிகள் என்று இந்தப் படங்களை அவர் பகிர்ந்துள்ளார். மிட் ஜர்னி தளம் மூலம் உருவாக்கப்பட்ட இந்தப் படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் இது சுமார் ஒரு லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. முதலில் பலரும் இந்தப் படத்தை உண்மை என்றே நினைத்துள்ளனர். அதுவே இந்த ஏஐ கருவிகளின் வெற்றியாகும்.

நெட்டிசன்கள்: இதற்கு நெட்டிசன்கள் பலரும் பல விதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். வாழ்க்கையை என்ஜாய் செய்ய வேண்டும்.. எந்த வயதில் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு இதுவே மிகச் சிறந்த உதாரணம் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர் இது ஏஐ படம் என்பதை அறியவே கஷ்டமாக உள்ளதாகப் பதிவிட்டுள்ளார். பலரும் இது உன்மை என்று நினைத்தே கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

அதேபோல உலகின் மிகவும் புகழ் பெற்ற நபர்கள் தெருக்களில் உணவு பரிமாறுவது போன்ற படங்களும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. அதில் ரொனால்டோ, போப் பிரான்சிஸ், வில் ஸ்மித், ஜானி டெப், டாம் குரூஸ், டேவிட் பெக்காம் ஆகியோர் உணவுகளைப் பரிமாறுவது போன்ற படங்கள் உள்ளது.
-
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
டிஆர்பி ராஜா எச்சரிக்கை: கிளாட் ஃபேபிள் 5 பிரச்சனை.. தமிழ்நாடு முன்கூட்டியே தயாரானது! -
இனி உலகை ஆளப்போவது 'மாங்கா' நிறுவனங்கள் தான்.. மிக முக்கியமான மாற்றம்! -
Claude Fable 5: வங்கிகளை மொத்தமாக முடக்கும் திறன் கொண்ட AI..? அமெரிக்க அரசு உத்தரவால் ஆந்த்ரோபிக் ஷாக்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு











Click it and Unblock the Notifications