மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த டி.ஆர்.பாலு.. திமுக அலுவலக திறப்பு விழா அழைப்பிதழை வழங்கினார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி : டெல்லி திமுக அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சென்று அழைப்பிதழை வழங்கினார்.

தேசிய தலைநகர் தில்லியில் திமுகவிற்கு நிரந்தர அலுவலக கட்டடம் திறக்கப்படுகிறது. அண்ணா-கலைஞர் அறிவாலயம் என்று பெயிரிடப்பட்ட இந்த கட்டடத்தை திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வருகின்ற ஏப்ரல் 2ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

இதில் கூட்டணி கட்சியினர், தேசிய தலைவர்கள், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், திமுக பொறுப்பாளர்கள் போன்றோர் திரளாக கலந்து கொள்ளவுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தில்லி தீன் தயாள் உபாத்யாய் பகுதியில் திமுகவிற்கு மூன்று அடுக்கு மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்சி அலுவலகத்தை ஏப்ரல் 2 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறந்து வைக்கப்பட இருக்கிறது. இந்த கட்டடத்தின் முன்பு மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணர். மு.கருணாநிதி ஆகியோர் மார்பளவு உருவச் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளையும் புதிய கட்டடத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

 திமுக டி.ஆர்.பாலு

திமுக டி.ஆர்.பாலு

இந்த நிகழ்ச்சிக்கு திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளரும், நீர் வளத்துறை அமைச்சருமான துரை முருகன் தலைமை வகிக்கவும் திமுக நாடாளுமன்றச் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு முன்னிலையும் வகிக்க உள்ளனர். இந்த திறப்பு விழாவை முன்னிட்டு இதற்கான அழைப்பிதழை டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக எம்பிக்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை திங்கள்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து அளித்தனர். இதே போன்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கும் மக்களவைத் தலைவர் ஓம் பிரலாவிற்கும் திமுக எம்பிக்கள் அனைவரும் ஒன்றாக சென்று அழைப்பிதழை வழங்கினர்.

மத்திய அமைச்சர் அமித் ஷா

மத்திய அமைச்சர் அமித் ஷா

மேலும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுசெயலாளர் டி.ராஜா போன்றோர்களுக்கும் டிஆர் பாலு தலைமையிலான திமுக எம்பிக்கள் குழு அழைப்பிதழ் அளிக்க இருப்பதாக தில்லி திமுக சார்பில் கூறப்பட்டது. இந்நிலையில் டெல்லி திமுக அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சென்று அழைப்பிதழை வழங்கினார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

முன்னதாக, இந்த கட்சி அலுவலக திறப்பு விழாவிற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டவர்கள் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது. இது திமுக கட்சி அலுவலக திறப்பு நிகழ்ச்சி. எல்லோருக்கும் அழைப்பிதழ் அளிக்கப்படும். ஆனால் அழைப்பிதழில் தலைவர், கட்சி பொதுச் செயலாளர், டி.ஆர். பாலு போன்றோர் பெயர்கள். தான் இடம்பெறும். தலைவர் தான் கட்சி அலுவலகத்தை திறக்கிறார். மற்ற தலைவர்கள் வந்தால் வரவேற்போம்' என திமுக வட்டாரத்தில் சொல்லப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+