ஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்திற்கு ஜாமீன்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.. சிறையில் இருந்து விடுதலை!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்திற்கு ஜாமீன்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.. இன்று பிற்பகல் விடுதலை!

    டெல்லி : டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) காலை ப சிதம்பத்திற்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து இரவு 8 மணி அளவில் திகார் சிறையில் இருந்து ப சிதம்பரம் விடுவிக்கப்பட்டார். .

    ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் இன்று முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சிறைக்கு சென்று 100 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் புகார் உள்ளது.

    இதில் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிபிஐ சார்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இரண்டும் தனி தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    ஜாமீன்

    ஜாமீன்

    இந்த சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினார்கள். ஆனால் அமலாக்கத்துறை இவரை உடனே கைது செய்தது. அமலாக்கத்துறை ப. சிதம்பரத்தை கைது செய்தது விசாரித்தது இதில் அமலாக்கத்துறை வழக்கு மிகவும் வலுவாக இருப்பதால் அதில் இருந்து ப. சிதம்பரத்திற்கு எந்த விதமான ஜாமீனும் கிடைக்கவில்லை.

    சிறையில் இருந்தார்

    சிறையில் இருந்தார்

    அமலாக்கத்துறை வழக்கில் தற்போது ப. சிதம்பரம் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதில் அவருக்கு நிறைய உடல் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக ப. சிதம்பரம் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். இவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று தொடர்ந்து டெல்லி ஹைகோர்ட் மறுத்தது.

    மீண்டும் வழக்கு

    மீண்டும் வழக்கு

    கடைசியாக நவம்பர் 14ம் தேதி இந்த வழக்கில் டெல்லி ஹைகோர்ட் நீதிபதி சுரேஷ் கெய்த் இந்த தீர்ப்பை வழங்கினார். இதற்கு எதிராக ப. சிதம்பரம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இந்த நிலையில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை கடந்த நவம்பர் 28ம் தேதி நடந்து முடிந்தது.

    ஹைகோர்ட் எப்படி

    ஹைகோர்ட் எப்படி

    டெல்லி ஹைகோர்ட் நீதிபதியின் தீர்ப்பில் இருக்கும் இந்த தவறையும் தன்னுடைய உடல் நலத்தையும் சுட்டி காட்டி ப.சிதம்பரம் ஜாமீன் கோரினார்.அவர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். பானுமதி மற்றும் நீதிபதிகள் ஏ எஸ் போபன்னா, ஹிரிஷிகேஷ் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

    கடைசியில் தீர்ப்பு

    கடைசியில் தீர்ப்பு

    இதில் ப.சிதம்பரம் சார்பாக வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகி வந்தனர். அமலாக்கத்துறை சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜர் ஆனார்.அதன்படி ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

    வெளியே வந்தார்

    நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டு இரவு 8 மணிஅளவில் திகார் சிறையில் இருந்து விடுதலையானார் ப சிதம்பரம். அவருக்கு சிறை வாசலில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வரவேற்றனர். அதன்பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+