இந்தியாவுக்கு வெடி வைத்த டிரம்ப்! அமெரிக்காவால் நமக்கு தொட்டதெல்லாம் நஷ்டம் தான்!
டெல்லி: வளைகுடா போர் காரணமாக எல்லோரும் கச்சா எண்ணெய் விலை உயர்வை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தியாவுக்கு அதைவிட பெரிய தலைவலி இருக்கிறது. வேளாண் பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்பதுதான், நமக்கிருக்கும் பெரிய பிரச்சனை. ஏற்கெனவே டிரம்ப் நம்முடைய பொருளாதார விஷயங்களில் எக்குத்தப்பாக ஏழரையை கூட்டி வைத்திருக்கிறார். இப்போது இந்த போர் சிக்கலை மேலும் தீவிரமாக்கியிருக்கிறது.
உலக தலைவர் எனில், நாலு நாட்டுக்கு நல்லது பண்ணனும். இல்லையென்றால் கெடுதல் செய்யாமலாவது இருக்கனும். ஆனால், டிரம்ப் பார்க்கும் வேலை எல்லாம் இந்தியாவின் நலனுக்க எதிராகவே இருக்கிறது.

1. என்ன பாதிப்பு?
கடந்த ஆண்டு, இந்தியாவின் மொத்த விவசாய மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் 21.8% பங்கு மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டுமே சென்றுள்ளது. இதன் மதிப்பு ரூ.3,322 கோடி. தற்போது அங்குள்ள போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதிகளில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, இன்சூரன்ஸ் செலவுகள் (Insurance costs) அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதாவது ஒரு கப்பல் இன்சூரன்ஸ் எடுக்கிறது எனில், அந்த கப்பலில் உள்ள பொருட்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதை இன்சூரன்ஸ் நிறுவனம்தான் ஈடுகட்ட வேண்டும். எனவே, இந்த நிறுவனங்கள் பிரீமியம் தொகையை அதிகரிக்கின்றன. இது இந்தியாவுக்கு கூடுதல் செலவு.
2. பாதிக்கப்படக்கூடிய முக்கியப் பொருட்கள்
இந்தியாவின் சில குறிப்பிட்ட விவசாயப் பொருட்கள் மத்திய கிழக்குச் சந்தையை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளன. குறிப்பாக வாழைப்பழத்திற்கு அவர்கள் நம் ஊரைதான் நம்பியிருக்கிறார்கள். இந்தியாவின் மொத்த வாழைப்பழ ஏற்றுமதியில் 79.6% வளைகுடா நாடுகளுக்குதான் செல்கிறது.
இதற்கு அடுத்தபடியாக இறைச்சி மற்றும் பால் பொருட்கள் ஏற்றுமதியாகிறது. வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு இறைச்சி ஏற்றுமதியில் 98.9%, மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 97.4% இந்த நாடுகளுக்கே செல்கிறது. வெண்ணெய் போன்ற பால் பொருட்கள் ஏற்றுமதியில் 58.1% இங்கேதான் நடக்கிறது.
அதேபோல இந்தியாவின் உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் 36.7% மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கிறது. போர் நடப்பதால் இது பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா போன்ற மாநில விவசாயிகளைப் பாதிக்கும். மேலும் ஏலக்காய், ஜாதிக்காய் போன்ற வாசனைப் பொருட்கள் ஏற்றுமதியில் 70.5% இந்த நாடுகளையே சார்ந்துள்ளது.
3. இதர தயாரிப்புகள்
இந்தியாவின் பீர் ஏற்றுமதியில் 81% மற்றும் குளிர்பான ஏற்றுமதியில் 55.6% மத்திய கிழக்கு நாடுகளுக்கே செல்கிறது. சில குறிப்பிட்ட புகையிலை தயாரிப்புகளின் ஏற்றுமதியில் 50% வரை இந்த சந்தையைப் பொறுத்தே உள்ளது.
4. விவசாயிகளின் மீதான தாக்கம்
இந்த ஏற்றுமதித் தடை அல்லது போக்குவரத்து தாமதம் ஏற்பட்டால், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள், உணவு பதப்படுத்துபவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள்.
5. எப்படி சரி செய்வது?
இப்போதைக்கு இந்த போர் ஓய்வதை போல தெரியவில்லை. வேலியில் போன ஓணானை பிடித்து, அமெரிக்கா தனது பேண்டுக்குள் விட்டுக்கொண்டது. எனவே மேலும் சில மாதங்களுக்கு சண்டை நீடித்தாலும் ஆச்சரியப்படுதற்கு இல்லை. எனவே, இந்தியா தனது ஏற்றுமதிக்காக ஒரே பிராந்தியத்தை (மத்திய கிழக்கு) மட்டும் 70 சதவீதத்திற்கும் மேலாக நம்பியிருப்பது ஆபத்தானது. சந்தையை மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்த வேண்டியது அவசியம் என பொருளாதார மற்றும் வர்த்தக ஆய்வு அமைப்பான GTRI எச்சரித்துள்ளது.
ஏற்கெனவே வரி விஷயத்தில் டிரம்ப் எடுத்த நடவடிக்கைகள் இந்தியாவை பாதித்திருந்தன. இப்போது ஈரான் போரை கொளுத்தி போட்டதன் மூலம், இந்தியாவின் ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
-
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
அமெரிக்காவுக்கு அடிமேல் அடி! சக்தி வாய்ந்த போர் விமானத்திற்கு நேர்ந்த கதி.. கெத்து காட்டும் ஈரான்! -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
சோப்பு, சீப்பு, எண்ணெய் எல்லாம் விலை உயரபோகுது.. வார்னிங் கொடுக்கும் ரிப்போர்ட்! -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications