ஹார்மூஸ் ஜலசந்தியை மூட தயாராகும் ஈரான்.. இந்தியாவின் பிளான் 'பி" என்ன? மத்திய அரசு அளித்த விளக்கம்
டெல்லி: அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஹார்மூஸ் ஜலசந்தியை மூடுவது குறித்து ஈரான் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டால் சர்வதேச அளவில் எண்ணெய் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ள நிலையில், இந்த இக்கட்டான சூழலை இந்தியா எப்படி சமாளிக்கப்போகிறது என்பது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி விளக்கம் அளித்து இருக்கிறார்.
அமெரிக்கா நடத்திய தாக்குதலையடுத்து, பதிலடி நடவடிக்கையை ஈரான் தொடங்கியுள்ளது. அந்த வகையில், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஒப்புதல் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தியை மூட வாய்ப்பு
ஹார்முஸ் ஜலசந்தி என்பது சாதாரண கடல்வழிப் பாதை மட்டுமல்ல.. இது சர்வதேச எரிசக்தி ஓட்டத்திற்கான முக்கியமான வழித்தடமாக விளங்குகிறது. இஸ்ரேல் ஈரான் மோதல் உச்சம் அடைந்துள்ள சூழலில், உலகம் எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகளின் எரிசக்தி விநியோகத்தைப் பெரிதும் நம்பியுள்ள இந்தியாவைப் போன்ற நாடுகள் இதில் அதிகம் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது.
ஏனெனில் உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் இந்த ஜலசந்தி வழியாகத்தான் நடைபெறுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கான சாத்தியக்கூறுகள் எழுந்துள்ள நிலையில், இந்தியாவின் எண்ணெய் விநியோகம் குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உன்னிப்பாக கவனித்து வருகிறோம்
அவர் கூறுகையில், "கடந்த இரண்டு வாரங்களாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையின் கீழ், கடந்த சில வருடங்களாகவே நாங்கள் எங்கள் விநியோகத்தை பன்முகப்படுத்தி இருக்கிறோம். அதனால், எங்கள் விநியோகத்தில் பெரும்பாலானவை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருவதில்லை.
எங்கள் எண்ணெய் விற்பனை நிறுவனங்களிடம் பல வாரங்களுக்கு தேவையான இருப்பு உள்ளது. மேலும், பல வழிகளில் இருந்து தொடர்ந்து எரிசக்தி விநியோகத்தைப் பெற்று வருகிறோம். எரிபொருள் விநியோகத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்," என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இறக்குமதியை அதிகரித்த இந்தியா
எண்ணெய் மற்றும் எரிவாயு மிகவும் முக்கியமானது என்பதால், இதன் போக்குவரத்தில் சிறிய இடையூறு ஏற்பட்டாலும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹார்முஸ் ஜலசந்தி ஒரு வாரத்திற்கு மேல் மூடப்பட்டால், அது உலக பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இதில் இந்தியாவுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில், "நிலைமை விரைவில் சரியாகிவிடும் என்று நாங்கள் நினைக்கிறோம்," என்றனர். இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. .ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ரஷ்யா, அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து தினமும் 22 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழித்தடம்
ஹார்மூஸ் ஜலசந்தி என்பது, ஈரான் மற்றும் ஓமன் ஐக்கிய அமீரகம் இடையே அமைந்து இருக்க கூடிய குறுகிய நீர்வழிப்பாதையாகும். இது பெர்சியன் வளைகுடா மற்றும் ஓமான் வளைகுடா, அரேபிய கடலுடன் இணைக்கிறது. 33 கி.மீ மட்டுமே அகலம் கொண்டது. இது உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழித்தடமாக கருதப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 2 மில்லியன் பேரல்கள் ஒருநாளைக்கு இந்த வழியாக கொண்டு செல்லப்படுகிறது. எனினும், இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு பல்வேறு வழிகளை கொண்டுள்ளது. இதனால், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டாலும், ரஷ்யா மற்றும் அமெரிக்கா பிரேசில் ஆகிய நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்ய இந்தியா தயாராக உள்ளதாகவும் தொழில்துறை நிபுணர்கள் கூறுகிறார்கள்.
-
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி? -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
ஈரானுக்கு பயணம் வேண்டாம்.. அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்.. மத்திய அரசு அவசர அறிவுறுத்தல் -
ஹார்முஸ் நோக்கி வந்த ஈரானிய டிரோன்கள்...சுட்டு வீழ்த்திய அமெரிக்கா..மீண்டும் உச்சத்தில் டென்ஷன் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications