இந்திய பெருங்கடலில் திக்திக்.. கப்பல் மீது டிரோன் அட்டாக்.. ஈரான்தான் காரணம்.. அமெரிக்கா பகீர்
டெல்லி: ஜப்பானுக்குச் சொந்தமான ரசாயன டேங்கர் ஒன்று இந்தியக் கடற்கரையில் சனிக்கிழமை தாக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பின் என்ன நடந்தது என்று அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தகவல் வெளியிட்டு உள்ளது.
ஈரானில் இருந்து சுடப்பட்ட ஒரு ட்ரோன்தான் இந்த கப்பலை தாக்கியதாக பென்டகன் தெரிவித்துள்ளது. செங்கடலுக்கு அப்பால் வணிகக் கப்பல் போக்குவரத்துக்கு விரிவடைவதை விரும்பாமல் ஈரான் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஏமனில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகளால் இந்த ட்ரான் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். இந்த தாக்குதல் காரணமாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரான் அமெரிக்கா: இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் ஈரான் நேரடியாக தலையிட்டு உள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரான் - அமெரிக்கா இடையே ஏமனில் மோதல் ஏற்பட்டு உள்ளது. இதெல்லாம் சேர்ந்து 3ம் உலகபோராக வெடிக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவாக ரகசியமாக ஈரான் படைகளை அனுப்பி உள்ளது. இன்னொரு பக்கம் ஈரானின் நேரடி ஆதரவில் ஹெஸ்புல்லா இயக்கம் இந்த போரில் களமிறங்கி உள்ளது. லெபனானில் இருந்து கொண்டு இந்த அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை விட்டுக்கொண்டு இருக்கிறது. ஹிஸ்புல்லா, ஹிஸ்பெல்லா என்று பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இயக்கம் லெபனானில் ஹெஸ்புல்லா என்ற பெயரில் இயங்கி வருகிறது.
மோதல் உச்சம்: சிரியா போர், லெபனான் போர் 2008 என்ற பல்வேறு போர்களில் ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல், அமெரிக்காவிற்கு எதிராக போராடி இருக்கிறது. இந்த நிலையில்தான் தற்போது இவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஈரான் ஆதரவு கொடுப்பதால்.. இதற்கு பின் ஈரானும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முக்கியமாக இந்த படைக்கு பண நீதியாக, ஆயுத தளவாட ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக ஈரான் உதவி செய்வதாக கூறப்படுகிறது. ஈரானின் இந்த செயல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை டென்ஷனுக்கு உள்ளாக்கி உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் ஜப்பானுக்குச் சொந்தமான ரசாயன டேங்கர் ஒன்று இந்தியக் கடற்கரையில் சனிக்கிழமை தாக்கப்பட்டது. ட்ரோன் தாக்குதல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 கடல் மைல் (370 கிலோமீட்டர்) தொலைவில் நிகழ்ந்தது, அமெரிக்க கடற்படை கப்பல்கள் எதுவும் அருகில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலின் போர் தொடங்கிய பின்னர், ஈரான் கப்பல்களை குறிவைப்பதாக பென்டகன் வெளிப்படையாக குற்றம் சாட்டியது இதுவே முதல் முறை.
இந்திய கடற்படை: இந்த விவகாரத்தில் இந்திய கடற்படை துரிதமாக செயல்பட்டது. கப்பல் கேப்டன் உதவி கோரியதற்கு உடனடியாக பதிலளித்ததாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. உடனடியாக சம்பவ பகுதிக்கு ஒரு விமானம் அனுப்பப்பட்டது, அது கப்பலின் மேல்நோக்கி சென்று ரோந்து செய்து செய்தது என்று என்று கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தேவையான உதவிகளை வழங்குவதற்காக இந்திய கடற்படை போர்க்கப்பலும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஈரான் காரணம் என்று அமெரிக்கா சொன்னாலும்.. இன்னும் யாரும் இதற்கு பொறுப்பேற்கவில்லை.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications