டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி குண்டுவெடிப்பு.. ஈரானை சேர்ந்த சிலரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி.. பல்வேறு அமைப்புகள் விசாரணை!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக ஈரான் நாட்டை சென்றதை சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில், பாதி எரிந்த நிலையில் துணி மற்றும் பாலித்தீன் பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் தேசிய பாதுகாப்பு காவலர் (என்.எஸ்.ஜி) குழுவும் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு.. இரு நபர்களை இறக்கிவிட்டு பறந்த டாக்ஸி.. தீவிரமடையும் விசாரணைஇஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு.. இரு நபர்களை இறக்கிவிட்டு பறந்த டாக்ஸி.. தீவிரமடையும் விசாரணை

டெல்லி குண்டு வெடிப்பு

டெல்லி குண்டு வெடிப்பு

டெல்லியில் அப்துல் கலாம் வீதியில் இஸ்ரேல் தூதரகம் உள்ளது. இங்கிருந்து சில அடி தூரத்தில் நேற்று மாலை திடீரென பயங்கர சப்தத்துடன் குண்டுவெடித்தது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதுடன், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அங்கிருந்த கார்கள் மட்டும் சற்றும் சேதம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் நாட்டவரிடம் விசாரணை

ஈரான் நாட்டவரிடம் விசாரணை

இந்த சம்பவத்தை தொடர்ந்து, இஸ்ரேல் தூதரகம் மற்றும் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, டெல்லியில் வசிக்கும் ஈரானை சேர்ந்த சிலரிடம் விசாரணை நடந்து வருகிறது. விசா காலம் முடிந்து தங்கியிருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில், பாதி எரிந்த நிலையில் துணி மற்றும் பாலித்தீன் பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெடிகுன்டு தீவிரம் என்ன?

வெடிகுன்டு தீவிரம் என்ன?

இதற்கும், குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் தேசிய பாதுகாப்பு காவலர் (என்.எஸ்.ஜி) குழுவும் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. வெடிகுண்டு வகை, அது எவ்வாறு நடப்பட்டது, அதன் தீவிரம் மற்றும் பிற விவரங்களை பகுப்பாய்வு செய்வதற்கான நிபுணராக இந்த நிறுவனம் கருதப்படுகிறது.

பல்வேறு அமைப்புகள் விசாரணை

பல்வேறு அமைப்புகள் விசாரணை

என்.எஸ்.ஜி அதிகாரிகளும் தீவிர விசாரணையில் உள்ளார்கள். இதற்கு முன்னர், சிறப்பு செல், குற்றப்பிரிவு, என்ஐஏ மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளும் இந்த இடத்திற்கு வருகை தந்துள்ளனர். மேலும் இஸ்ரேலிய தூதரகம் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து குற்றப்பிரிவின் குழுவும் விசாரணை நடத்தி வருகிறது.

English summary
Some people are being investigated for going to Iran in connection with the bombing near the Israeli embassy in Delhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X