சரியாக தட்கல் புக்கிங் சமயத்தில் திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி தளம்.. ஒரே மாதத்தில் 3வது முறை!
டெல்லி: இன்று காலை தட்கல் புக்கிங் ஓபன் ஆக வெறும் 10 நிமிடங்கள் இருந்த போது திடீரென ஐஆர்சிடிசி செயலி மற்றும் இணையதளம் என இரண்டும் முடங்கிவிட்டது. இதனால் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். டிசம்பர் மாதம் ஐஆர்சிடிசி தளம் முடங்குவது இது மூன்றாவது முறையாகும்.
நமது ஊரில் ரயில்கள்தான் தொலைதூர போக்குவரத்துக்கு முக்கியமானதாக இருக்கிறது. டிக்கெட் ரேட் குறைவு, பஸ்களை காட்டிலும் பாதுகாப்பானது, விரிவான நெட்வொர்க் உள்ளிட்ட காரணங்களால் பலரும் ரயிலில் பணிக்கவே விரும்புகிறார்கள்.

ரயில் பயணங்கள் அதிகரித்து இருக்கும் போதிலும், ரயில் டிக்கெட்களை புக் செய்வது சமீப காலமாகக் கஷ்டமான ஒன்றாக மாறி வருகிறது. ரயில் டிக்கெட்களை புக் செய்யப் பயன்படும் ஐஆர்சிடிசி தளம் முக்கிய நேரங்களில் முடங்குவது வாடிக்கையாக மாறியிருக்கிறது.
நாளை நாம் புத்தாண்டை கொண்டாட உள்ள நிலையில், இன்று டிச. 31ம் தேதி காலை திடீரென ஐஆர்சிடிசி செயலி மற்றும் இணையதளம் என இரண்டும் முடங்கிவிட்டது. இந்த டிசம்பர் மாதம் ஐஆர்சிடிசி தளம் முடங்குவது இது மூன்றாவது முறையாகும். அதுவும் இன்று தட்கல் புக்கிங் தொடங்க 10 நிமிடங்களே இருக்கும் போது சரியாக 9.50 மணியளவில் ஐஆர்சிடிசி தளம் முடங்கியுள்ளது. இந்த மாதம் ஐஆர்சிடிசி முடங்கிய மூன்று முறையும் தட்கல் புக்கிங் சமயத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஆர்சிடிசி இணையதளத்திற்குச் சென்றவர்களுக்கு "முன்பதிவு மற்றும் ரத்துசெய்தல் அடுத்த ஒரு மணி நேரத்திற்குக் கிடைக்காது. சிரமத்திற்கு வருந்துகிறோம். டிக்கெட் ரத்து செய்ய/ டிடிஆர் பதிவு செய்ய உதவி மைய எண்களான. 14646,08044647999 & 08035734999 அல்லது [email protected] தொடர்பு கொள்ளவும்" என்று மட்டும் வருகிறது.
முக்கிய விடுமுறை நாட்களில் அதிகளவிலான மக்கள் தட்கலில் புக் செய்ய முயலும் நிலையில், இதுபோல தொடர்ந்து முடங்குவது பயணிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications