OMICRON: இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதியா?.. நிபுணர் குழு இன்று முக்கிய முடிவு..!
பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
டெல்லி: இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கொடுக்கலாமா? வேண்டாமா? என்று தேசிய நிபுணர் குழுவினர் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவைரஸ் கலக்கம் இன்னும் நீங்காத நிலையில், அதற்குள் ஒமைக்ரான் வைரஸ் மிரட்ட வந்துள்ளது..
இதுவரை ஒமைக்ரான் வைரஸூக்கு 23 பேர் பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. 2 தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா
எனினும், ஒமைக்ரான் வைரஸ் பல நாடுகளில் பரவத் தொடங்கி உள்ள நிலையில், இந்தியாவில் பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து அரசு அதிகாரிகள் பல்வேறு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.. இந்நிலையில், பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கு அனுமதி அளிப்பது குறித்து, தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப நிபுணர் குழு இன்று டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது..

ஆலோசனை
18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கலாமா? என்றும் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப நிபுணர் குழு இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது... ஒருவேளை பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்தால், முதியோர், இணை நோய்கள் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இருவேறு கருத்துக்கள்
இதற்கு முன்பு இதுகுறித்து நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்திலும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்த இருவேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. பூஸ்டர் தடுப்பூசி தேவை இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.. கொரோனா பரவல் சூழ்நிலைக்கு ஏற்ப அடுத்த கட்ட முடிவு எடுக்கலாம் என்று மேலும் சில நிபுணர்கள் தெரிவித்தனர்... ஆனால், சில நிபுணர்கள் மட்டுமே 3-வது கட்ட தடுப்பூசியை மத்திய சுகாதாரத் துறை உடனடியாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்..
Recommended Video

இன்று தெரியும்
இப்படி நிபுணர்களின் மாறுபட்ட கருத்துக்கள் காரணமாக நடந்து முடிந்த கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படாத நிலையில், இன்றைய கூட்டத்தில் அதற்கான முடிவு தெரிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. சீரம் நிறுவனம் தனது தயாரிப்பான கோவிஷீல்டின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கோரிய நிலையில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications