நடப்பு ஆண்டில் இரட்டை இலக்க வளர்ச்சி சாத்தியமா?.. நிர்மலா சீதாராமன் கருத்துக்கு ப சிதம்பரம் பதிலடி
டெல்லி: நடப்பு ஆண்டில் இரட்டை இலக்க வளர்ச்சி குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்துக்கு பதில் தரும் வகையில், இரட்டை இலக்க வளர்ச்சி என்பது அடைய முடியாத கனவாகவே தோன்றுகிறது என்று ப சிதம்பரம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் தொழில்துறைகள் முடங்கின. இதனால், சர்வதேச அளவில் பெரும் பொருளதார நெருக்கடி ஏற்பட்டது.
கொரோனா 2- வது அலை தீவிரம் குறைந்த பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இதனால், பொருளாதாரம் படிபடியாக மீட்சி அடைய தொடங்கியது.

இந்தியா 5-ஆம் இடம்
அதிலும் இந்திய பொருளாதாரம் எதிர்பார்த்த அளவை விட வேகமாக மீண்டு எழுந்தது. இத்தகைய காரணங்களால் இந்தியாவின் பொருளாதாரம் பிரிட்டனை விட வளர்ச்சி அடைந்ததாக ப்ளூம்பெர்க் நிறுவனம் அண்மையில் தெரிவித்தது. உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இந்தியா 5-ஆம் இடம் பிடித்தது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்கப்பட்டது.

இரட்டை இலக்க வளர்ச்சி
அப்போது நிர்மலா சீதாராமன் கூறுகையில், ''நடப்பு நிதியாண்டில் இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கும் என்றும், அதற்காக நாங்கள் உழைத்து வருகிறோம்'' என்றும் கூறினார். மேலும் அவர் 'நாம் பேசிக்கொண்டிருக்கும் சில வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா ஒரு நல்ல நிலையில் தான் இருக்கிறது. இது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமும் கூட'' என்றார்.

ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொள்ளவில்லை
இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு பதில் தரும் வகையில் ப சிதம்பரம் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், '2022-23 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.. ஆனால், ரிசர்வ் வங்கி அவரது கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

அடைய முடியாத கனவாகவே..
நான்கு காலாண்டுகளில் 16.2, 6.2, 4.1 மற்றும் 4.0 என்று வளர்ச்சி இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இதன்படி ஆண்டு வளர்ச்சி சுமார் 7.5 சதவீதமாக இருக்கும். அதேவேளையில், நாம் முதல் காலாண்டை ரிசர்வ் வங்கி கணித்ததை விட குறைவாக அதாவது 13.5 சதவீதம் என துவங்கியிருக்கிறோம். அடுத்த மூன்று காலாண்டுகளில் பொருளாதாரம் எப்படி இருக்கும் என்று யாரால் சொல்ல முடியும்? 2022-23-ல் இரட்டை இலக்க வளர்ச்சி என்பது அடைய முடியாத கனவாகவே தோன்றுகிறது'' என்று பதிவிட்டுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications