Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தானுக்கு ஆதரவு.. துருக்கி, அஜர்பைஜான் கதையை இந்தியாவால் முடிக்க முடியுமா? இதை செய்தாலே போதும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதலின்போது துருக்கி மற்றும் அஜர்பைஜான் நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தன. பாகிஸ்தானில் உள்ள ராணுவ முகாம்களை அழித்ததற்கு இந்தியாவை கண்டித்தன. இந்நிலையில் தான் துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாட்டுக்கும், நம் நாட்டுக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை உறவு குறித்தும், இந்தியா நினைத்தால் துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு வர்த்தக ரீதியாக அடி கொடுக்க முடியுமா? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. ஆனாலும் கூட எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து வாலாட்டி வருகிறது. ட்ரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்த முயற்சிக்கிறது. இதற்கு நம் நாடு உரிய பதிலடியை கொடுத்து வருகிறது.

Turkey india Azerbaijan

இந்த மோதலில் துருக்கி, அஜர்பைஜான் நாடுகள் நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக 9 பயங்கரவாதிகள் முகாமை நம் நாடு தாக்கி அழித்தது. இதனை துருக்கி, அஜர்பைஜான் நாடுகள் கண்டித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்பதாக பகிரங்கமாக அறிவித்தன. அடிப்படையில் துருக்கி, அஜர்பைஜான் ஆகியவை இஸ்லாமிய நாடுகள் என்பதால் பாகிஸ்தான் பக்கம் நிற்கின்றன.

இதனால் இருநாடுகள் மீதும் நம் மக்கள் அதிருப்தியாகி உள்ளனர். துருக்கி, அஜர்பைஜானை எடுத்து கொண்டால் சுற்றுலாவுக்கு மிகவும் பிரபலமான நாடுகளாகும். நம் நாட்டில் இருந்து ஆண்டுதோறும் இங்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

துருக்கியை விடுங்க..பாகிஸ்தானுடன் கைகோர்த்த இன்னொரு இஸ்லாமிய நாடு.. யாரு பாருங்க!
தற்போது பாகிஸ்தான் பக்கம் சாய்ந்ததால் துருக்கியை போல் அஜர்பைஜானுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு சுற்றுலாத்துறை நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அதேபோல் துருக்கி, அஜர்பைஜானுக்கு சுற்றுலா செல்வதை பொதுமக்கள் தவிர்க்க சமூக வலைதளங்களிலும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது ஒருபுறம் இருக்க இந்த இருநாடுகளுக்கும், நம் நாட்டுக்கும் இடையேயான வர்த்தக உறவு பற்றிய டேட்டாக்கள் வெளியாகி உள்ளது. இதில் முதலில் நாம் பார்ப்பது அஜர்பைஜான். இது மிகவும் சிறிய நாடு. மக்கள் தொகை என்பது சுமார் 1 கோடி மட்டும் தான். இங்கு இஸ்லாமியர்கள் தான் அதிகம் உள்ளனர். நம் நாட்டுக்கும், அஜர்பைஜானுக்கும் இடையே வர்த்தக ரீதியிலான உறவு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சொல்லப்போனால் நம் நாட்டின் முக்கியமான வர்த்தக நாடுகளில் ஒன்றாக அஜர்பைஜான் உள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் டேட்டா விளக்கமாக தெரிவிக்கிறது.

அந்த டேட்டாவின்படி இந்தியா - அஜர்பைஜான் இடையேயான வர்த்தகம் என்பது 2005ம் ஆண்டில் 50 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு இருந்தது. ஆனால் 2023ல் இந்த வர்த்தக உளவு என்பது வளர்ந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் இருநாடுகள் இடையே 1.435 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது. அதாவது கடந்த 2023ல் இந்தியா தான் அஜர்பைஜானிடம் இருந்து அதிக பொருட்களை வாங்கி உள்ளது.
கடந்த 18 ஆண்டுகளில் 50 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருநாடுகள் இடையேயான வர்த்தகம் அதிகரித்துள்ளது.

அதன்படி கடந்த 2023ம் ஆண்டில் 1.235 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அஜர்பைஜானிடம் இருந்து நம் நாடு பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. 201 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பொருட்களை அஜர்பைஜானுக்கும் நம் நாடு ஏற்றுமதி செய்துள்ளது. அதுமட்டுமின்றி அஜர்பைஜான் என்பது நம் நாட்டுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகளில் முக்கியமான ஒன்றாக உள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் அஜர்பைஜானில் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்கிய நாடுகளின் பட்டியலில் நம்நாடு 3ம் இடம் பிடித்தது. மொத்தம் 1.227 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கச்சா எண்ணெயை மட்டுமே இந்தியா வாங்கி உள்ளது.

இதுதவிர நம் நாட்டை சேர்ந்தவர்கள் துருக்கியை போல் அஜர்பைஜானுக்கும் அதிகமாக சுற்றுலா சென்று வருகின்றனர். அஜர்பைஜான் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த 2022ம் ஆண்டில் நம் நாட்டில் இருந்து அஜர்பைஜானுக்கு மொத்தம் 60,731 பேர் சுற்றுலா சென்றிருந்தனர். இது கடந்த 2023ம் ஆண்டில் 1.17 லட்சம் என்று உயர்ந்த நிலையில் 2024ம் ஆண்டில் 2.43 லட்சம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.

இதன்மூலம் அஜர்பைஜான் செல்லும் வெளிநாடுகளின் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. ரஷ்யா, துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அடுத்ததாக நம் நாட்டில் இருந்து தான் அதிகமானவர்கள் அஜர்பைஜானுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். இதற்கு இருநாடுகள் இடையேயான விமான சேவைகள் அதிகரித்தது தான். நம் நாட்டின் தலைநகரான டெல்லியில் இருந்து அஜர்பைஜானின் தலைநகர் பாகுவிற்கு வாரத்தில் 10 நேரடி விமான சேவைகள் உள்ளது. இண்டிகோ சார்பில் 7 விமானங்களும்,அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் சார்பில் 3 விமானங்களும் இயக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் துருக்கியை எடுத்து கொண்டால் நம் நாட்டுக்கும், அந்த நாட்டுக்கும் இடையேயான வர்த்தகம் என்பது நல்ல நிலையில் தான் உள்ளது. கடந்த 2022-23 காக்கட்டத்தில் இருநாடுகள் இடையேயான வர்த்தகம் என்பது 13.8 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்த 2023-24ம் ஆண்டில் சரிந்து 10.43 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இதில் 6.65 பில்லியன் டாலருக்கு துருக்கியில் இருந்து பொருட்களை நாம் இறக்குமதி செய்துள்ளோம். 3.78 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நாம் துருக்கிற்கு ஏற்றுமதி செய்துள்ளோம்.

அதேபோல் 2000ம் ஆண்டு முதல் 2023 டிசம்பர் மாதம் வரை துருக்கியில் இருந்து நம் நாட்டுக்கு அந்நிய நேரடி முதலீடு என்ற வகையில் 227.5 மில்லியன் டாலர் அமெரிக்க டாலர் கிடைத்துள்ளது. மறுபுறம் 2000 ஆகஸ்ட் முதல் 2024 மார்ச் மாதம் வரை துருக்கிக்கு நம் நாட்டில் இருந்து அந்நிய நேரடி முதலீடு என்ற வகையில் 200 மில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்துள்ளது.

அதேபோல் கடந்த 2022ம் ஆண்டை ஒப்பிடும்போது துருக்கிக்கு சுற்றுலா சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை என்பது கிடுகிடுவென அதிகரித்தது. கடந்த ஆண்டு மட்டும் 3.3 லட்சம் பேர் நம் நாட்டில் இருந்து துருக்கிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதனால் நம் நாட்டை வைத்து துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகள் வர்த்தகம் மற்றும் சுற்றுலா துறையில் கல்லா கட்டுகின்றன. ஆனால் விசுவாசத்தை மட்டும் பாகிஸ்தானுக்கு காட்டுகின்றன. இதனால் நம் நாடும், நம் நாட்டு மக்களும் நினைத்தால் துருக்கி மற்றும் அஜர்பைஜானை புறக்கணிக்கலம். பொதுமக்கள் இருநாடுகளுக்கு பதில் வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்லாம். நம் நாடும் துருக்கி மற்றும் அஜர்பைஜான் உள்ளிட்டவற்றுக்கு பதிலாக நம் நாட்டுடன் நெருங்கிய நட்பு நாடாக உள்ள பிற நாடுகளிடம் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து ஆதரவு அளிக்கலாம் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+