முதியோர் உதவித் தொகையை உயர்த்தும் வாய்ப்பு உள்ளதா? ரவிக்குமார் எம்பிக்கு மத்திய அரசு தந்த பதில்
டெல்லி: நாடு முழுவதும் முதியோர் உதவித் தொகையை மத்திய அரசு உயர்த்துவதற்கான வாய்ப்பு இல்லை என்பது நாடாளுமன்றத்தில் இன்று அளிக்கப்பட்ட பதில் மூலம் தெரிய வந்துள்ளது.
நாடாளுமனறத்தின் லோக்சபாவில் விழுப்புரம் தொகுதி எம்பி ரவிக்குமார் முதியோர் உதவி தொகைக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்து பூர்வமாக பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறும் போது, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 முதல் 79 வயதுக்குட்பட்ட முதியோர்களுக்கு மாதம் 200 ரூபாய் ஓய்வூதியமும், 80 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள பயனாளிகளுக்கு மாதம் 500 ரூபாய் ஓய்வூதியமும் தேசிய சமூக உதவித் திட்டத்தின்(என்எஸ்ஏ) கீழ் மத்திய அரசு வழங்கி வருகிறது.
தற்போது வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையை உயர்த்தும் திட்டம் எதுவும் தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை. அதேநேரம் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் என்எஸ்ஏபியின் கீழ் மத்திய அரசு தரும் உதவித்தொகையை அதிகமாக அளிக்க ஊக்குவிகிறோம்.
இதன்படி முதியோர் ஓய்வூதியத்தை பயனாளிக்கு மாதம் ரூ.50 முதல் ரூ.3000 ரூபாய் வரை மாநில அரசுகளால் உயர்த்தி வழங்கப்படுகிறது. 2002-03 முதல் 2013-14 வரை, மாநிலத் திட்டமாக என்எஸ்ஏபி செயல்படுத்தப்பட்டது.
இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கும். தேசிய குடும்ப நலத் திட்டம் மற்றும் அன்னபூர்ணா ஆகிய அனைத்து துணைத் திட்டங்களுக்கும் மத்திய அரசு கூடுதல் உதவி தொகை வழங்கி வருகிறது.

இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் - இரண்டும் 2009 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2014-15 முதல், இத்திட்டம் 'மத்திய நிதியுதவித் திட்டமாக' மாற்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது" இவ்வாறு அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி திமுக எம்.பி. டி.ரவிகுமார் கூறுகையில், மத்திய அரசின் புள்ளி விவரங்களின் படி, தமிழ்நாட்டில் 2011-12 இல் 12 லட்சத்து 4 ஆயிரமாக இருந்த முதியோர் ஓய்வூதியர்களின் எண்ணிக்கை 2021-22 ஆம் ஆண்டில் 12 லட்சத்து 39 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அவர்களுக்கு மத்திய அரசு கொடுத்த ஓய்வூதியத் தொகைக்கான நிதி 2021-22 இல் 589.85 கோடி ஆக இருந்தது.
2016-17 முதல் 3 ஆண்டுகள் ஒவ்வொரு ஆண்டும் 360.15 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2019-20 இல் 250 கோடியும் 2020-21 இல் 201.26 கோடியும் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. முதியோர் உதவி தொகையை மத்திய அரசு உயர்த்தாவிட்டாலும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு உயர்த்தி உள்ளது என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications