உங்க சுயரூபம் தெரிஞ்சிடுச்சு.. நீங்க முதல்ல வெளிநாடு போங்க.. கோலியை வைத்து செய்த நெட்டிசன்ஸ்!

கிரிக்கெட் ரசிகர் ஒருவரை இந்தியாவைவிட்டு வெளியேறும்படி விராட் கோலி கூறிய வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இந்திய ரசிகரை நாட்டை விட்டு வெளியேற சொன்ன விராட் கோஹ்லி

    டெல்லி: கிரிக்கெட் ரசிகர் ஒருவரை இந்தியாவைவிட்டு வெளியேறும்படி விராட் கோலி கூறிய வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இதனால் கோலியின் சுயரூபம் தெரிந்துவிட்டது என்று மக்கள் கிண்டல் செய்துள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி முதல்முறை பெரிய சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளார். நேற்று கேள்வி பதில் அளிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் விராட் கோலி பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.

    அதில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் எல்லோரும் மிகைப்படுத்தப்பட்டவர்கள். இவர்கள் ஆட்டத்தை பார்க்க வெளிநாட்டு வீரர்களின் ஆட்டத்தை பார்த்துக் கொள்வேன் என்று கூறினார். இதற்கு கோலி அளித்த பதில்தான் வைரலாகி உள்ளது.

    என்ன வீடியோ

    அதற்கு பதில் அளித்த கோலி, உங்களுக்கு இந்திய வீரர்களை பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இந்தியாவில் இருக்க கூடாது. வெளிநாட்டு வீரர்களை ரசிக்க நீங்கள் ஏன் இந்தியாவில் இருக்க வேண்டும். இந்தியாவை விட்டு வெளியே செல்லலாமே என்று காட்டமாக பதில் அளித்துள்ளார். இது பெரிய விமர்சனத்தை பெற்றுள்ளது.

    என்ன விமர்சனம்

    இவர் ''ஒருவரை இந்தியாவை விட்டு வெளியே செல்லும்படி சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை கோலி'' என்றுள்ளார்.

    என்ன சொல்றீங்க

    இவர் ''ஆஸ்திரேலியாவிலும், இங்கிலாந்திலும் உள்ள இந்தியர்கள் இந்திய அணியை கொண்டாடும் போது சந்தோசப்படுகிறீர்கள் அல்லவா, அவர்களிடம் சென்று அந்த நாட்டு அணியையே பாராட்டும் படி சொல்ல முடியுமா உங்களால்?'' என்றுள்ளார்.

    நீங்க போங்க

    இவர் ''விராட் கோலி ஒரு பெடரர் ரசிகர்தானே, இந்தியா டென்னிஸ் வீரர்களை ரசிக்காமல் இருக்கும் இவர்தான் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்'' என்றுள்ளார் இவர்.

    சொன்னாலும் சொல்வார்

    இவர் ''இந்திய வீரர்களை நேசிக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்!"- விராட் கோலி ; அதுசரி, விட்டா உங்கள பிடிக்காதவங்கள ஆன்டி-இந்தியன்னு கூட சொல்லுவீங்க போல'' என்றுள்ளார்.

    இத்தாலி கல்யாணம்

    இவர் ''தலைக்கனம் அதிகமான இப்டி தான் பேச தூண்டும். கல்யாணத்தை மட்டும் இத்தாலியில் வச்சிட்டு நீ எல்லாம் இத பத்தி பேசலாமா? '' என்றுள்ளார்.

    அடடே

    இவர் கோலி வெளிநாட்டு வீரர் ஒருவருக்கு வாழ்த்து தெரிவித்ததை கிண்டல் செய்து, கோலி நீங்க எப்போது வெளிநாடு செல்ல போகிறீர்கள். ஒழுங்காக விளையாட்டில் கவனம் செலுத்துங்கள். வலதுசாரியாக முயற்சி செய்யாதீர்கள் என்றுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+