ராஜ்யசபாவில் நியமன எம்.பி.யாக இசைஞானி இளையராஜா தமிழில் பதவியேற்றார்
டெல்லி: நாடாளுமன்றத்தில் ராஜய்சபாவின் நியமன எம்.பி.யாக இசைஞானி இளையராஜா இன்று தமிழில் பதவியேற்றார். முன்னதாக டெல்லிக்கு நேற்று வருகை தந்த இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

நாடாளுமன்ற ராஜ்யசபாவுக்கு ஜனாதிபதியால் 12 பேர் நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்படுவது மரபு. துறைசார் பிரபலங்கள், நியமன எம்.பிக்களாக நியமிக்கப்படுவர். நடப்பாண்டில் இசைஞானி இளையராஜா, தடகள வீராங்கனை பிடி உஷா, தர்மசாலா கோவில் நிர்வாக அறங்காவலர் வீரேந்திர ஹெக்டே, திரைக்கதை எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் ஆகியோர் ராஜ்யசபா எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டனர்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த திங்கள்கிழமையன்று தொடங்கியது. அன்றைய தினம் நியமன எம்.பி.க்கள், ராஜ்யசபாவில் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால் வெளிநாட்டில் இருந்ததால் இளையராஜா எம்.பி. பதவி ஏற்க இயலாமல் இருந்தது.
இதன்பின்னர் அமெரிக்கா நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு தமிழ்நாடு திரும்பினார் இளையராஜா. அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று இளையராஜா டெல்லி சென்றார். டெல்லி விமான நிலையத்திலும் இளையராஜாவுக்கு மேள தாளங்கள் முழங்க அசத்தலான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று நாடாளுமன்றம் சென்றார் இளையராஜா. ராஜ்யசபாவில் எம்.பி.யாக தமிழில் இளையராஜா பதவியேற்றுக் கொண்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications