பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு.. இஸ்ரோ அறிவிப்பு! தொழில்நுட்பக் கோளாறு காரணம்!
டெல்லி: பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 'புரோபா-3’, 'கரோனா கிராப்’ என்று பெயரிடப்பட்ட இணை செயற்கைகோள்களை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைகோள்களுடன் இன்று பிஎஸ்எல்வி சி-59 விண்ணில் பாய கவுண்ட் டவுன் நேற்று தொடங்கி இருந்தது. இந்நிலையில் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதலை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது இஸ்ரோ.
இஸ்ரோவின் ஒரு அங்கமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் மூலமாக வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வணிகரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சூரியனை ஆராய்வதற்காக ப்ரோபா-3, 'கரோனா கிராப்' எனும் இரட்டை செயற்கைக்கோள்களை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்தது.

'புரோபா-3’ 'கரோனா கிராப்' செயற்கைகோள்கள் 550 கிலோ எடை கொண்டவை. சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்யும் வகையில் இந்த இணை செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏவுதளமான, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 4.08க்கு மணிக்கு பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த 2 செயற்கைகோள்களையும், முதலில் குறைந்தபட்சம் 600 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சம் 60 ஆயிரத்து 530 கிலோ மீட்டர் உயரமுள்ள நீள்வட்ட சுற்றுவட்ட பாதையிலும் நிலை நிறுத்தி, பின்னர் இணை சுற்றுவட்டப் பாதையில் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி59 ராக்கெட் நிலை நிறுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
ராக்கெட்டுக்கான எரிபொருட்கள் நிரப்பப்பட்டு, இறுதிக்கட்ட பணியான கவுன்ட்டவுன் 25 மணி நேரமாக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று பிற்பகல் 3.08 மணிக்கு கவுன்ட்டவுன் தொடங்கியது. அதன்படி இன்று மாலை 4.08 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாயும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் ஏவுதல் நாளை மாலை 4.12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் ஏவுதல் திட்டத்தை நாளைக்கு ஒத்திவைப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
2 செயற்கைக்கோள்களும் 150 மீட்டர் இடைவெளியில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளிப் பகுதியை ஆய்வு செய்து தரவுகளை அனுப்பும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-59 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழவேற்காடு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications