காங்கிரசுக்கு ரூ.3500 கோடி அபராதம்.. "தேர்தல் முடியும் வரை நடவடிக்கை இல்லை!" வருமான வரித்துறை உறுதி
டெல்லி: வருமான வரி கணக்கில் முரண்பாடு இருந்ததாக கூறி ரூ.3,500 கோடியை காங்கிரஸ் கட்சிக்கு அபராதமாக வருமான வரித்துறை விதித்திருந்தது. இதற்கு எதிராக காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்த நிலையில், தேர்தல் முடியும் வரை அபராதத்தை வசூலிக்க நிர்ப்பந்திக்க மாட்டோம் என வருமான வரித்துறை நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எதிர்க்கட்சிகளை முடக்கும் பணியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரூ.200 கோடி வரி பாக்கி என்று கூறி காங்கிரஸ் கட்சியின் 4 வங்கி கணக்குகளையும் வருமான வரித்துறை முடக்கியது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி வங்கி கணக்கு முடக்குவது கட்சியை முடக்குவதற்கு சமம் என காங்கிரஸ் விமர்சித்திருந்தது.

இதனையடுத்து கடந்த 2017 முதல் 2021ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் வருமான வரியை மறுமதிப்பீடு செய்யும் வேலைகளை வருமான வரித்துறை தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியது. ஆனால், நீதிமன்றம் இந்த விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று உறுதியாக கூறிவிட்டது. இதனையடுத்து சில மணி நேரங்களில் ரூ.1700 வரி பாக்கி இருப்பதாக காங்கிரஸுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது.
தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் வருமான வரி கணக்கை ஆய்வு செய்த வருமான வரித்துறை, இதில் ஏராளமாக முரண்பாடுகள் இருப்பதாகவும் எனவே ரூ.3,567 கோடியை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியது.
ஏற்கெனவே, கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் போன்ற இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், காங்கிரசுக்கு ரூ.3500 கோடி அபராதம் விதித்தது மத்திய அரசு மீது விமர்சனங்களை எழச்செய்தது.
தங்கள் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தை அணுகியது. இது தொடர்பான வழக்கு இன்று நீதிபதி நாகரத்னா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, “தேர்தல் முடியும் வரை அபராதத்தை வசூலிக்க நிர்ப்பந்திக்க மாட்டோம்” என்று உறுதியளித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
தனியாக வாழும் தம்பதிகள்.. உச்ச நீதிமன்றம் விவாகரத்து வழக்குகள் தொடர்பாக முக்கியமான தீர்ப்பு -
வங்கி கடன் செட்டில்மென்ட்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி -
8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தகுதி அரசு வேலைகள்.. தமிழக வங்கி வழக்கில் உச்ச நீதிமன்றம் மேஜர் தீர்ப்பு












Click it and Unblock the Notifications