டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகின் மிக பழமையான நாடு.. அட இந்தியா இல்லையாம்.. அப்போ நாம எத்தனையாவது இடம் தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: உலக மக்கள்தொகை மதிப்பாய்வின்படி (WPR) உலகின் மிக பழமையான நாடுகளின் பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகை மற்றும் இதர புள்ளி விவரங்களை 'உலக மக்கள் தொகை மதிபாய்வு' தொகுத்து வழங்குகிறது. அந்த வகையில் சமீபத்தில் இந்த WPRன் அறிக்கை வெளியானது. அதன்படி உலகம் முழுவதும் ஒரு நிமிடத்திற்கு சுமார் 140 பேர் பிறக்கின்றனர். ஆனால் சில நாடுகளில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே அதிக வித்தியாசங்கள் இருந்து வந்தன.

ஆனால் இனி வரும் காலங்களில் குறிப்பாக 2080 மற்றும் 20100வது ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை சமநிலையை அடையும். அதாவது பிறப்பும் இறப்பும் ஒரே அளவில் இருக்கும் என்று WPR தெரிவித்திருக்கிறது. இது உலக மக்கள் தொகையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். மக்கள் தொகை சரிவுக்கு வழிவகுக்கும். இந்தியா இக்காலகட்டத்தில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்கும்.

It has been reported that India is at the 7th place in the list of oldest countries in the world

ஏனெனில் தற்போதே சீனாவின் மக்கள் தொகை சுருங்க தொடங்கிவிட்டது. அதேபோல இந்தியாவின் மக்கள் தொகை 2050 வரை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கும். மறுபுறம் உலக அளவில் மக்களின் வாழ்க்கை நாட்கள் அதிகரித்திருக்கிறது. 1990களில் உலக அளவில் மக்களின் வாழ்க்கை நாட்கள் 63 ஆண்டுகளாக இருந்தது. ஆனால் இது 2019ல் 9 அண்டுகள் அதிகரித்து 72.8ஆக இருக்கிறது. அதாவது தற்போது உலகம் முழுவதும் மக்கள் சராசரியாக 72 வயது வரை வாழ்கின்றனர். இது 2050ல் 77.2 ஆண்டுகளாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், எச்ஐவி உள்ளிட்ட நோய் தொற்றின் பாதிப்பையும் நாம் குறைப்போம் என்று WPR கூறியுள்ளது.

It has been reported that India is at the 7th place in the list of oldest countries in the world

அதேபோல 2050ம் ஆண்டில் 5 வயது குழந்தைகளின் எண்ணிக்கையானது தற்போது இருப்பதைவிட 2 மடங்கு அதிகரித்திருக்கும். அப்போது 12 வயது குழந்தைகளின் எண்ணிக்கையை 5 வயது குழந்தைகளின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கும். அதேபோல உலகின் மிக பழமையான நாடுகள் குறித்து சந்தேகங்கள் பலர் மத்தியிலும் எழுந்திருகிறது. இந்தியா உலகின் 7வது மிக பழமையான நாடாகும். இருப்பதிலேயே மிகவும் பழமையான நாடு ஈரான்தான். இந்நாடு சுமார் 3,200 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாகிவிட்டது. இதற்கு அடுத்ததாக எகிப்து மிக பழமையான நாடாக பார்க்கப்படுகிறது. இது சுமார் 3,100 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாகிவிட்டது.

இந்த வரிசையில் 2070 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான நாடு என்கிற பெருமையுடன் சீனா 6வது இடத்தில் இருக்கிறது. இந்தியா உருவாகி 2,000 ஆண்டுகள்தான் ஆகிறது. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் ஜார்ஜியாவும், இஸ்ரேலும் உருவாகியிருக்கின்றன. இந்தியாவில் கிமு 600ம் ஆண்டிலிருந்து ஹரியங்கா மன்னர்கள் ஆட்சி செய்ய தொடங்கினர். அதேபோல தென்னிந்தியாவில் கிமு 500வது ஆண்டிலிருந்து பாண்டியர்கள் ஆட்சி செய்ய தொடங்கினார்கள். பின்னர் சோழர்கள், சேரர்கள் ஆட்சி செய்ய தொடங்கினார்கள். இறுதியாக தஞ்சை மராட்டிய பேரரசு கி.பி 1674 முதல் 1855 வரை ஆட்சியில் இருந்தார்கள். அதன் பின்னர் ஆங்கிலேயர்கள் 1858 தொடங்கி 1947 வரை தங்கள் ஆதிக்கத்தை இந்தியாவில் நிலை நாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to the World Population Review (WPR), India ranks 7th in the list of oldest countries in the world. Iran is the oldest country in existence. The country was formed about 3,200 years ago. Next to this, Egypt is seen as the most ancient country. It was formed about 3,100 years ago.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X