புதிய பாதையில் இந்தியா காலடி வைக்கும் நாள் இது! வீடுகளில் தேசிய கொடியேற்றியது பெருமை- மோடி பேச்சு
டெல்லி: நாடு முழுவதும் 76வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வீடுகள் தோறும் தேசியக்கொடியை ஏற்றி இருப்பது பெருமையளிப்பதாக தனது உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் பிரதமர் மோடி செங்கோட்டையில் தனது சிறப்புரை ஆற்றிய பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார்.
அதேபோல சுதந்திரத்துக்காக பாடுபட்ட பெண் சுதந்திர போராட்ட வீராங்கனைகளின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் 76வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதில், வீடுகள் தோறும் தேசியக்கொடியை ஏற்றி இருப்பது பெருமையளிப்பதாக பிரதமர் கூறியுள்ளார். முன்னதாக சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுங்கள் என்று பிரதமர் வலியுறுத்தி இருந்தார்.

இதனையடுத்து அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு நாடு முழுவதும் சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் தனது உரையில் மேலும் கூறியதாவது, "சுதந்திரத்துக்காக பாடுபட்ட பெண் சுதந்திர போராட்ட வீராங்கனைகளின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது. பல்வேறு மகத்தான தலைவர்களை தந்த நாடு, நம்நாடு என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும். மகாத்மா காந்தியின் கனவை நனவாக்க நான் என்னையே தியாகம் செய்கிறேன். வேகமான வளர்ச்சியில், புதிய பாதையில் இந்தியா அடியெடுத்து வைக்கின்ற நாள் இது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "நம் நாடுதான் ஜனநாயகத்தின் தாயகம். இந்தியாவின் பன்முக தன்மையே அதன் வலிமை. பல்வேறு தடைகள் இருந்தும் அதனை தகர்த்து இந்தியா முன்னேறி வருகிறது. இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட அனைத்து வீரர்களையும் தலைவர்களையும் வணங்குகிறேன். பல்வேறு மக்களை உள்ளடக்கிய நம்முடைய சமுதாயம் தான் நமது பலமாக இருக்கிறது. இப்படியான பலமிக்க நாட்டின் விடுதலைக்காக பெண்கள் ஆற்றிய பங்கு மகத்தானது. இந்த போராட்டங்களின் மூலம், பல்வேறு மகத்தான தலைவர்களை தந்த நாடு, நம்நாடு என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும்."
"நான்தான் சுதந்திரத்திற்கு பின்னர் பிறந்த இந்தியாவின் முதல் பிரதமர். ஆனால், சுதந்திரப் போராட்டத்தின் தியாகங்களின் வலிகளை நான் உணர்ந்துள்ளேன். எனது வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் இந்தியாவின் கடைசி குடிமகனுக்கும் அரசின் சலுகைகள் சென்று சேர்வது என்பதுதான். அதுதான் மகாத்மா காந்தியினுடைய கனவாகவும் இருந்தது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி விநியோகம் இருந்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. 200 கோடி தடுப்பூசிகள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன." என பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
நேரு, வேலு நாச்சியார், பாரதியாரை நினைவுக்கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி