திடீரென மயங்கி விழுந்த ஜெகதீப் தன்கர்.. துணை ஜனாதிபதி பொறுப்பை ராஜினாமா செய்யும் முன் நடந்தது என்ன?
டெல்லி: ஜெகதீப் தன்கர் தனது துணை ஜனாதிபதி பொறுப்பை நேற்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதம் இன்று மத்திய அரசால் ஏற்கப்பட்டுள்ளது. ஜெகதீப் தன்கர் தனது உடல்நிலையை காரணம் காட்டி ராஜினாமா செய்தார். ஆனால் அரசியல் காரணங்களால் அவர் ராஜினாமா செய்துள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் ராஜினாமா செய்வதற்கு முன்பாக ஜெகதீப் தன்கர் மயங்கி விழுந்தது தொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் தொடங்கிய ராஜ்யசபா தலைவராக இருக்கும் நம் நாட்டின் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் வழங்கினார்.

தனது உடல்நலனை காரணம் காட்டி ஜெகதீப் தன்கர் பதவியை ராஜினாமா செய்தார். ஜெகதீப் தன்கரின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜெகதீப் தன்கரின் துணை ஜனாதிபதி பொறுப்பு அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.
துணை ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். ஜெகதீப் தன்கர் கடந்த 2022ம் ஆண்டு துணை ஜனாதிபதியானார். இவரது பதவிக்காலம் 2027 ம் ஆண்டு வரை இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக பொறுப்பேற்ற 3 ஆண்டுகளிலேயே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜெகதீப் தன்கருக்கு தற்போது 74 வயது ஆகிறது.
இந்நிலையில் தான் ராஜினாமா செய்வதற்கு முன்பு ஜெகதீப் தன்கர் மயங்கி விழுந்துள்ளார். கடந்த 17 ம் தேதி ஜெகதீப் தன்கர் தோட்டத்துக்கு தனது மனைவி மற்றும் டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா ஆகியோருடன் சென்றார்.
அப்போது அவருக்கு திடீரென்று உடல்நல பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். அதன்பிறகு அவர் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளார். மேலும் சமீபகாலமாக ஜெகதீப் தன்கர் உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆஞ்சிபிளாஸ்டி சிகிச்சை பெற்றிருந்தார்.
முன்னதாக ஜெகதீப் தன்கர் திடீரென்று ராஜினாமா செய்ததால் இந்த விவகாரம் விவாதத்தை கிளப்பியது. ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவின் பின்னணியில் அவரது உடல்நலத்துக்கு அப்பாற்பட்டு பாஜகவின் பிரஷர் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். மேலும் ஜேபி நட்டா மற்றும் ஜெகதீப் தன்கர் இடையே பிரச்சனை இருந்ததாகவும், இதனால் அவர் ராஜினாமா செய்ததாகவும் கூறப்பட்டு வருகிறது.
இப்படியான சூழலில் தான் ஜெகதீப் தன்கர் கடந்த 17 ம் தேதி திடீரென்று மயங்கி விழுந்தது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஜெகதீப் தன்கர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய பிறகு அதற்கான காரணத்தை அறிக்கையாக வெளியிட்டார். அதில், உடல்நலத்தைப் பேணி காக்க வேண்டியும், மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டியும், இந்திய அரசியலமைப்பின் 67(a) பிரிவின்படி, குடியரசுத் துணைத் தலைவர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்கிறேன்.
எனது பதவிக்காலத்தில், நாட்டின் ஜனாதிபதியிடமிருந்து கிடைத்த நிலையான ஆதரவுக்கும், சிறந்த ஒத்துழைப்புக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மகத்தான முன்னேற்றத்திற்கு சாட்சியாக இருந்தததும், அதில் பங்கேற்றதும் எனக்கு கிடைத்த பாக்கியம்.
பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களின் ஒத்துழைப்புக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து தான் பெற்ற அன்பு மற்றும் நம்பிக்கையை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். இந்தியாவின் உலகளாவிய வளர்ச்சி மற்றும் சாதனைகளில் பெருமிதம் கொள்கிறேன். நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்'' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications