"2027ல் தான் ஓய்வு.." 10 நாட்களுக்கு முன்பு கூட அடித்து சொன்ன ஜெகதீப் தன்கர்! திடீர் மாற்றம் ஏன்?
டெல்லி: துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தது இங்குப் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஏன் திடீரென ராஜினாமா செய்தார்.. இதன் பின்னணியில் ஏதோ நடந்துள்ளது என எதிர்க்கட்சிகள் பேச ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையே இரு வாரங்களுக்கு முன்பு 2027ல் தான் ஓய்வு பெறுவேன் என ஜெகதீப் தன்கர் கூறும் ஒரு வீடியோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ராஜ்யசபா தலைவர் என்ற முறையில் நாட்டின் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தலைமையில் முதல் நாள் கூட்டம் நடந்தது. இதற்கிடையே நேற்று மாலை திடீரெனத் தனது துணை குடியரசுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக தன்கர் அறிவித்தார். இதற்கான கடிதத்தையும் அவர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் வழங்கினார்.

ஜெகதீப் தன்கர்
உடல்நிலை காரணமாகவே ராஜினாமா செய்வதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் வேறு ஏதோ நடந்திருக்கிறது என்று கூறி வருகிறார்கள். இது தொடர்பாகப் பல்வேறு பேச்சுகளும் அடிபட்டு வருகிறது. இதற்கிடையே ஜெகதீப் தன்கர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ இப்போது இணையத்தில் பரவி வருகிறது.
2027ல் தான் ஓய்வு
அதில் தான் சரியான நேரத்தில் ஓய்வு பெறுவேன் என்றும் 2027ல் தான் ஓய்வு பெறுவேன் என்றும் ஜெகதீப் தன்கர் கூறுகிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. கடந்த ஜூலை 10ம் தேதி டெல்லி ஜேஎன்யு-இல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இந்தக் கருத்துகளைக் கூறினார். அந்த நிகழ்ச்சியில் அவர், "நான் சரியான நேரத்தில் ஓய்வு பெறுவேன். 2027 ஆகஸ்ட்டில் தான் நான் ஓய்வு பெறுவேன். அதேநேரம் தெய்வீக தலையீடு எதாவது இருந்தால் அது மாறலாம்" என்று கூறியிருந்தார்.
திடீர் ராஜினாமா
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், திடீரென மாலை துணை குடியரசுத் தலைவர் ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவுக்கு முக்கிய காரணங்களாக எதிர்க்கட்சிகள் சில விஷயங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. நேற்றைய தினம் நடந்த ராஜ்யசபா கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்காதது மற்றும் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா சபையில் பேசிய கருத்துக்கள் போன்றவை ராஜினாமாவுக்குக் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன
காங்கிரஸ் குற்றச்சாட்டு
நேற்று மாலை 4.30 மணிக்கு நாடாளுமன்ற அலுவல் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் கிரண் ரிஜிஜு ஆகியோர் கலந்து கொள்ளாததால் துணை ஜனாதிபதி அதிருப்தி அடைந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து கூறுகையில், "அமைச்சர்கள் வருவார்கள் என்று உறுப்பினர்கள் காத்திருந்தனர், ஆனால் அவர்கள் கடைசி வரை வரவில்லை" என்றார்.
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளார். முக்கியமான வேலை காரணமாக அவர்கள் வர முடியவில்லை என்றும் இதுகுறித்து அவைத் தலைவருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாக அமைச்சர் ஜெபி நட்டா தெரிவித்தார்.
அவமரியாதை
காங்கிரஸ் மேலும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதாவது ஜே.பி. நட்டா ராஜ்யசபாவில் பேசியபோது, எதிர்க்கட்சியினர் சில கருத்துகளைக் கூறினர். அப்போது நட்டா திடீரென அவை தலைவர் தன்கர் பக்கம் திரும்பி, இங்கு எதிர்க்கட்சிகளின் கருத்துகளைப் பதிவு செய்யக்கூடாது. தனது கருத்துகளை மட்டுமே அவை குறிப்பில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது. இது துணை ஜனாதிபதியை அவமதிக்கும் செயல் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் நட்டா இந்தக் குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார்.
சமீபத்தில் தான் ஜெகதீப் தன்கர் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்துகொண்ட நிலையில், அதன் காரணமாகவே ராஜினாமா செய்ததாக பாஜக கூறுகிறது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications