நட்சத்திர ஓட்டலில் காதலிகளுடன் கைதிகள் உல்லாசம்.. மருத்துவ பரிசோதனை என்று அழைத்து சென்ற காவலர்கள்
டெல்லி: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மத்திய சிறையில், பல்வேறு குற்றங்கள் தொடர்பாக தண்டனை பெற்றவர்களும், விசாரணை கைதிகளும் ஆயிரக்கணக்கில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் சில கைதிகள் மருத்துவ பரிசோதனைக்கு செல்வதாகக்கூறி நட்சத்திர ஓட்டலில் காதலிகளுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் ராஜஸ்தானில் அம்பலத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தில் லஞ்சம் வாங்கிக்கொண்டு உடந்தையாக இருந்த போலீசார் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தவறு செய்தவர்களை தண்டிப்பதற்காகவும், அவர்கள் மீண்டும் தவறு செய்யக்கூடாது என்று நினைத்து வருந்துவதற்காகவும் தான் சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. சிறையில் காவலர்கள் அடிப்பார்கள், டிவி இருக்காது, மின் விசிறி இருக்காது. நினைத்த உணவை சாப்பிட முடியாது. மது அருந்த முடியாது, போதை பொருள் பயன்படுத்த முடியாது, கழிவறைகள் மோசமாக இருக்கும். ஒரே அறையில் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று சினிமாக்களை பார்த்து நினைத்திருப்பீர்கள். ஆனால் இதில் பாதி உண்மை உள்ளது என்றாலும், பாதிக்கு பாதி பொய் தான்.

சிறைகளில் வசதிகள்
வசதி படைத்த சிறைக் கைதிகள் சிலர், ஜெயிலில் பணியாற்றுவோரை கைக்குள் போட்டுக் கொண்டு, சிறையிலேயே சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் . பல்வேறு சிறைகளில் வெளியில் தெரியாமல் நடந்து வருகிறது. இன்றும் இந்தியாவில் எந்த சிறைக்கு போய் திடீர் ஆய்வு நடத்தினாலும், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை பார்க்க முடியும். செல்போன்களையும் பார்க்க முடியும்.
தாதாக்கள் சொகுசு
சிலர் வசதியான வாழ்க்கை வாழ்வதையும் பார்க்க முடியும். யார் இப்படியான சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று பார்த்தால், மிகப்பெரிய தாதாக்களாக இருப்பார்கள். அதேபோல் பெரிய அரசியல்வாதிகளாக இருப்பார்கள். அரசியல்வாதிகள் சொகுசாக இருந்த வீடியோக்கள், புகைப்படங்களை கூட பார்த்திருப்போம்.
ஜெய்ப்பூர் சிறை
ஏனெனில் பணம் கொடுத்துவிட்டால், சிறைக்குள் எல்லாமே கிடைக்கும் என்கிற நிலைமை ஒரு சில சிறைகள் அப்பட்டமாக இருக்கிறது. அந்த வகையில், மருத்துவப் பரிசோதனை என்ற பெயரில் சிறைக்கைதிகளை உல்லாசப் பயணத்துக்கு அழைத்துச் சென்ற சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்துள்ளது.
நான்கு கைதிகள்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தான் அம்மாநிலத்தின் மிகப்பெரிய மத்திய சிறைச்சாலை இருக்கிறது. நம்மூர் புழல் சிறை போல் பெரிய சிறைச்சாலை அமைந்துள்ளது. அங்குள்ள மத்திய சிறையில், பல்வேறு குற்றங்கள் தொடர்பாக தண்டனை பெற்றவர்களும், விசாரணை கைதிகளும் ஆயிரக்கணக்கில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ரபீக் பக்ரி, பன்வர்லால், அங்கித் பன்சால், கரண் குப்தா ஆகிய 4 கைதிகளும் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள அனுமதி பெற்றுள்ளார்கள்.
நட்சத்திர ஓட்டல்
அதன்படி அவர்களை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். ஆனால் அவர்கள் 4 பேரும் சொன்னபடி மருத்துவமனைக்கு செல்லவில்லை. 4 கைதிகளும், போலீசாரும் ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு சென்றனர். பல்வேறு சொகுசு வசதிகளும் உள்ள அந்த நட்சத்திர ஓட்டல்களில் போலீசாரும், கைதிகளும் காலை உணவு சாப்பிட்டிருக்கிறார்கள், பின்னர் உல்லாசப் பயணம் செல்வது போல், தனித்தனி அறை எடுத்து தங்கி 'உற்சாகமாக' இருந்துள்ளனர்.
உல்லாசம்
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், 4 கைதிகளும் அவர்களது மனைவி மற்றும் காதலிகளை தனிமையில் சந்தித்து, நட்சத்திர ஓட்டலில் உல்லாசமாக இருந்துள்ளனர். ரபீக் தனது மனைவியையும், பன்வர் தனது முன்னாள் காதலியையும் ஓட்டலில் சந்தித்தாராம். இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், தாதா ரபீக்கின் மனைவி போதைப்பொருளுடன் நட்சத்திர ஓட்டலுக்கு வந்தாராம். மற்ற கைதிகளான அங்கித் மற்றும் கரண் ஆகியோர் விமான நிலையம் அருகில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு சென்றனர். அந்த ஓட்டல் கரணின் காதலியால் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
திரும்ப வரவில்லை
இப்படி உற்சாகத்தில் இருந்த கைதிகள் 4 பேரும், மாலை 5.30 மணிக்குள் சிறைக்கு திரும்பவில்லை.. என்னாச்சு மாலை வரை வரவில்லையே என்று விசாரித்த போது தான், சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அவர் இதுபற்றி உடனடியாக விசாரணை நடத்தியுள்ளார்கள். அப்போது இதற்கு போலீசாரே உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது
லஞ்சம் வாங்கியவர்கள் கைது
இந்த உற்சாக பணிக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரையிலும், சிலருக்கு ரூ.5 ஆயிரம் வரையிலும் கைதிகள் லஞ்சம் கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து ரபீக், பன்வர், அங்கித், கரண் மற்றும் அவர்களை அழைத்தச் சென்ற 5 போலீசார், உறவினர்கள் உள்பட 13 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து பணமும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இதுபற்றி உயர் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையிலும் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள். ராஜஸ்தானில் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications