நீட் பயிற்சி மையத்தின் மாடியிலிருந்து குதிக்க முயன்ற மாணவி! கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்
டெல்லி: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், நீட் பயிற்சி மைய கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து, 19 வயது மாணவி ஒருவர் கீழே குதிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜெய்ப்பூரில் மகேஷ் நகரில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. மாடியிலிருந்து குதிக்க முயன்ற மாணவி பயிற்சி மையத்தில் தங்கி நீட் பயிற்சி பெற்று வந்தார். நேற்று திடீரென அவர் மூன்றாவது மாடிக்கு சென்று அங்கிருந்து குதிக்க முயன்றுள்ளார்.

பால்கனி சுவரின் மீது ஏறி அமர்ந்த அந்த மாணவி கீழே குதிக்க முயன்றிருக்கிறார். மாணவியை பின்தொடர்ந்து சென்ற ஆசிரியர் சரியான நேரத்தில் மாணவியை பிடித்து இழுத்து காப்பாற்றியிருக்கிறார். பின்னர் மாணவி பத்திரமாக கீழே கொண்டுவரப்பட்டு அவருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் சுருவைச் சேர்ந்த இந்த மாணவி, சமீபத்தில் பயிற்சி மையத்தில் சில தேர்வுகளில் தோல்வியடைந்ததாகவும், இதுதொடர்பாக விசாரிக்க பயிற்சி மையத்திற்கு அவரது பெற்றோர்கள் வந்ததாகவும், எனவே பயந்துபோய் மாடியிலிருந்து கீழே குதிக்க முயன்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
நீட் தொடர்பான மரணங்கள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஜெய்பூரில் நடத்த சம்பவம் ராஜஸ்தான் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
-
நீட் வினாத்தாளுடன் தூத்துக்குடி சென்ற வாகனம்.. நடு வழியில் நின்றதால் பரபரப்பு.. இரவில் நடந்தது என்ன? -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications