பாஜக + வாட்ஸ்அப் யுனிர்வர்சிட்டி = செங்கோல் கதை இதுதான்.. காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் புதுவிளக்கம்
டெல்லி: ஆட்சி மாற்றத்திற்கான அடையாளமாக 'செங்கோல்' முன்னாள் பிரதமர் நேருவிடம் கொடுக்கப்பட்டதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். மட்டுமல்லாது இது குறித்த தகவல்கள் வாடஸ் அப் பல்கலைக்கழகங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
நாளை மறுநாள் (மே.28) புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படுகிறது. சுமார் ரூ.25,000 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய நாடாளுமன்றம் பல்வேறு விவாதங்களை எழுப்பியிருக்கிறது. முதல் விவாதம் ஏன் புதிய நாடாளுமன்றம் அவசியம்? என்பதுதான். இந்தியாவை விட பணக்கார நாடுகளாக உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன் ஆகிய நாடுகள் கூட நூற்றாண்டு பழைய நாடாளுமன்றத்தை இன்றும் இடிக்காமல் வைத்திருக்கிறது. அதற்கு மாற்றாக வேறு நாடாளுமன்றத்தை கட்டவில்லை.

அமெரிக்கா 1800ம் ஆண்டு கட்டப்பட்ட நாடாளுமன்றத்தை இன்றும் பயன்படுத்தி வருகிறது. இங்கிலாந்து 1870, ஜெர்மனி 1904, ரஷ்யா 1935 என பணக்கார நாடுகள் பழைய நாடாளுமன்றத்தையே பயன்படுத்தி வருகின்றன. இப்படி இருக்கும்போது புதிய நாடாளுமன்றம் கட்டு என்ன தேவை ஏற்பட்டது என எதிர்க்கட்சிகள் தொடக்கத்திலேயே கேள்வியெழுப்பினர். ஏனெினல் தற்போதுவரை நாடாளுமன்றம் நன்றாகதான் இருக்கிறது. அவசியமெனில் கூடுதல் கட்டடங்கள் கட்டிக்கொள்ளலாமே என்று சொல்லப்பட்டது.
ஆனால் அதையும் மீறி கடந்த 2020ம் ஆண்டு புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து அதே ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி இதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். அப்போதும் பிரச்னை எழுந்தது. அதாவது, இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
இதனையடுத்து தற்போது நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்பட்டு அவை நாளை மறுநாள் (மே.28) திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பிதழில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஏனெனில் பிரதமர் மோடிதான் நாடாளுமன்றத்தை திறக்க இருக்கிறார். இது பெரும் பஞ்சாயத்தாக வெடித்தது. அதாவது நாடாளுமன்றம் என்பது குடியரசுத் தலைவர், இரண்டு அவைகள் என்று அரசியலமைப்பு சட்டத்தின் 74(1) மற்றும் 79வது பிரிகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சிகள், இதன் அர்த்தம் நாடாளுமன்றத்தின் தலைவர் குடியரசுத் தலைவர்தான் என்றும், எனவே அவரை வைத்து புதிய கட்டிடத்தை திறக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் பாஜக, பிரதமர் மோடிவை வைத்து புதிய நாடாளுமன்றத்தை திறப்பது என்பதில் உறுதியாக இருக்கிறது. இந்த பிரச்னைகளெல்லாம் ஒருபுறம் இருக்க மறுபுறம் இந்த நிகழ்வு குறித்து பேட்டியளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு முக்கியமான விஷயத்தை கூறினார்.
அதாவது, "இந்தியா சுதந்திரம் அடைந்த போது ஆட்சி அதிகாரம் கைமாற்றப்படுவதை குறிக்க என்ன செய்யலாம்? என்று யோசித்த நேரு ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார். அப்போதுதான் செங்கோல் கைமாற்றிக்கொள்ளலாம் என ராஜாஜி கூற, இந்த செங்கோலை ஏற்பாடு செய்யும் பொறுப்பும் ராஜாஜியிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

எனவே ராஜாஜி திருவாடுதுறை ஆதினத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, ஆதினம் சைவ சின்னம் பொறித்த செங்கோல் ஒன்றை கொடுத்திருக்கிறார். இந்த செங்கோல் மவுன்ட் பேட்டன் பிரபுவிடம் கொடுக்கப்பட்டது பிரதமர் நேருவுக்கு வழங்கப்பட்டது. தற்போது இந்த செங்கோல்தான் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
இதுதான் தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதாவது, செங்கோல் நேருவுக்கு வழங்கப்பட்டது உண்மைதான். ஆனால் அது சுதந்திரத்தின் அடையாளமாக வழங்கப்பட்டதற்கான எந்த சான்றும் இல்லை என்று காங்கிரஸ் தகவல் தொடர்ப்பு பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
மேலும், "அப்போதைய மதராஸ் மாகணத்தின் ஒரு மத ஸ்தாபனத்தால் உருவாக்கப்பட்ட கம்பீரமான செங்கோல் 1947ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேருவுக்கு வழங்கப்பட்டது உண்மைதா். ஆனால் ராஜாஜி கையிலிருந்து மவுட்பேட்டன் கைகளுக்கு மாறி அவர்கள் ஆட்சி அதிகார மாற்றத்தின் அடையானமாதான் இந்த செங்கோலை கொடுத்தார்கள் என்பதற்கான எந்த ஆதாரங்களும் கிடையாது. இது முழுக் முழுக்க ஒரு சிலரின் மனதில் உற்பத்தியாகி, வாட்ஸ்அப் பல்கலைக்கழகம் வழியாக பரப்பப்படுகிறது.
தற்போது அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்த செங்கோலை, தமிழ்நாட்டில் கால் பதிக்க விரும்புவோர்கள் தங்கள் அரசியல் நோக்கத்திற்காக தவறான தகவல்களுடன் பயன்படுத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் உண்மையான கேள்வி செங்கோல் பற்றியல்ல, புதிய நாடாளுமன்றத்தை திறக்க ஏன் குடியரசுத் தலைவரை அனுமதிக்கவில்லை என்பது குறித்துதான்" என்று ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications