பாக் தாக்குதல் பற்றி எச்சரித்த அமெரிக்கா! இந்தியா சொன்னது என்ன தெரியுமா? ஜெய்சங்கர் பகிர்ந்த ரகசியம்
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ருபியோ, இந்தியா மீது மிகப்பெரிய ராணுவ தாக்குதலை பாகிஸ்தான் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் கூறுவதாக தகவல் கொடுத்தார். இதற்கு இந்தியா தீர்க்கமாக பதிலளித்ததாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடியாக இந்தியா மீது பாகிஸ்தான் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்க முற்பட்டது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலை இந்தியா தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் முறியடித்தது. பாகிஸ்தான் விமான தளங்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது.
இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு, மத்திய அரசின் ராஜ்ய ரீதியிலான நடவடிக்கை மற்றும் இராணுவ நிலைப்பாடு குறித்து விளக்கினார். அப்போது, ஜெய்சங்கர் கூறியதாவது:- இந்த மாத துவக்கத்தில், சர்வதேச நாடுகள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியது.
மிகப்பெரிய தாக்குதலை முன்னெடுக்க போவதாக
அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ருபியோ, இந்தியா மீது மிகப்பெரிய ராணுவ தாக்குதலை பாகிஸ்தான் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் கூறுவதாக தகவல் கொடுத்தார். இதற்கு இந்தியா தீர்க்கமாக பதிலளித்தது. அதாவது, பாகிஸ்தான் மிகப்பெரிய தாக்குதலை முன்னெடுக்க முயன்றால் அதற்கு நிகரான எதிர்தாக்குதலை எதிர்கொள்ள அந்த நாடு தயாராக இருக்க வேண்டும் என்று கூறியது" என்று பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.
அதேபோல, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றத்தை தணிக்க மூன்றாம் தரப்பு நாடுகள் மத்தியஸ்தம் செய்ததாக வெளியான தகவலை நிராகரித்து இருக்கிறார் ஜெய்சங்கர். 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்குவதற்கு முன்பு பயங்கரவாதிகளையும் அவர்களின் முகாம்களையும் மட்டுமே குறிவைத்து தாக்க இருப்பதாக பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஜெய்சங்கர் பேசியதாக வெளியான வீடியோ தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
காங்கிரஸ் குற்றசாட்டு நேர்மையற்றது
இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர் கூறியதாவது:- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு முன்பு பாகிஸ்தானுக்கு தகவல் அளித்ததாக காங்கிரஸ் முன்வைத்த குற்றசாட்டு நேர்மையற்றது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்ட பிறகே பாகிஸ்தானுக்கு தகவல் அளித்தோம். எதிர்க்கட்சிகள் உண்மையை தவறாக சித்தரிக்க முயற்சிக்கின்றன. எனது கருத்தை தவறாக மேற்கோள் காட்டி சில தலைவர்கள் அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது.
பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்பின் தலைமையகங்களை பாதுகாப்பு படையினர் துல்லியமாக தாக்கினர். பயங்கரவாத முகாம்களில் நடத்தப்பட்ட தாக்குதல் பாகிஸ்தான் படைகளின் மன உறுதியையும் பாதித்தது. உலகில் உள்ள 200 நாடுகளில், துருக்கி, அஜர்பைஜான் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்றன.
பேச்சுக்கே இடம் இல்லை
பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவை கடைபிடித்து வரும் சீனா கூட , பாகிஸ்தானுக்கு தெளிவான ஆதரவை வழங்கவில்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை உலக நாடுகள் பலவும் பாராட்டின. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதன் தாக்கம் அடுத்த சில நாட்களில் தெரியும். சண்டை நிறுத்தம் வெறும் தற்காலிக நடவடிக்கைதான்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பயங்கரவாதம் தவிர, பாகிஸ்தானுடன் வேறு எந்த பேச்சுவார்த்தையும் இருக்க போவது இல்லை. ஆபரேஷன் சிந்தூரை நிறுத்திய விவகாரத்தில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் குறித்த பேச்சுக்கே இடம் இல்லை. பாகிஸ்தான் ராணுவ ஜெனரல், இந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அதன்பிறகே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது" என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications