இதுதான் குஜராத் மாடலா? குழாய் இருக்கு! ஆனா தண்ணீர் வரல.. குடிநீருக்கு போராடும் மக்கள்!
காந்திநகர்: குஜராத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று ஆளும் பாஜக அரசு கூறி வரும் நிலையில், குடிநீர் விநியோகம் போதுமான அளவுக்கு இல்லை என்றும், தேசிய சராசரியை விட குறைவாக இருக்கிறது என்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் 'வீட்டுக்குழாய் இணைப்புகளின் செயல்பாட்டுத் திறன் மதிப்பீட்டு அறிக்கை-2024' படி, குஜராத்தில் வெறும் 47.3% வீடுகளுக்கு மட்டுமே தரமான குடிநீர் வழங்கப்படுகிறது. இது தேசிய சராசரியான 76%ஐ விடக் கணிசமாகக் குறைவு.

இந்த அமைச்சகத்தின் திட்ட இலக்கின்படி, ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டருக்கும் மேல் குடிநீர் பெறும் வீடுகள் குஜராத்தில் 58.7% மட்டுமே உள்ளன. இது தேசிய சராசரியான 80.2%ஐ விடக் குறைவு. மேலும், குழாய் நீர் இணைப்புகளின் செயல்பாட்டு நிலையும் தேசிய சராசரி 76%ஐ விட 47.3%ஆகக் குறைவாகப் பதிவாகியுள்ளது.
இதற்கிடையே, காந்திநகரில் டிசம்பர் 29 முதல் 100-க்கும் மேற்பட்ட டைபாய்டு காய்ச்சல் கேஸ்கள் பதிவாகியுள்ளன. குடிநீரில் கழிவுநீர் கலந்ததே இதற்கு காரணம் என மாநகராட்சி ஆணையர் கூறியிருந்தார். அப்படியெனில், விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவு மட்டுமல்ல.. தரமும் மோசமாக இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்த பிரச்சனையை தொடர்ந்து, கசிவுகள் சரிசெய்யப்பட்டு, நீர் குளோரின் மூலம் சுத்திகரிக்கப்பட்டதாகவும் ஆணையர் விளக்கமளித்தார்.
அறிக்கையின்படி, காந்திநகரில் வெறும் 31.9% வீடுகளும், மாநிலத்தின் பெரிய நகரமான அகமதாபாத்தில் 46.1% வீடுகளும் மட்டுமே குடிப்பதற்கு உகந்த நீரைப் பெறுகின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications