மாணவர்கள் படிக்கும் அறையில் கண்ணீர் புகை குண்டு.. பார்வை பறிபோனதாக ஜாமியா பல்கலைக்கழகம் புகார்
டெல்லி: மாணவர்கள் படிக்கும் அறையில் போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசியதால் அவர்களில் சிலருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டதாக ஜாமியா மிலியா பல்கலைக்கழக நிர்வாகம் மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. டெல்லியில் இந்த போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இ்நத நிலையில் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இந்த பல்கலைக்கழகத்தில் போலீஸார் அதிரடியாக கடந்த சில் நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸாரும் மாணவர்கள் மீது கடுமையாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

பல்கலைக்கழக நிர்வாகம்
மேலும் கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. இந்த நிலையில் மாணவர்கள் படிக்கும் அறைகளில் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. இதனால் மாணவர்களில் சிலருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தடியடி
இதுகுறித்து அந்த நிர்வாகம் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி அதை கடந்த 15, 16 தேதிகளில் சமர்ப்பித்தது. அந்த கடிதத்தில் மதுரா சாலை மற்றும் ஜூலேனா சாலையில் போராட்டக்காரர்களை கலைக்க போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

காவலர்கள்
அப்போது மௌலானா முகமது அலி ஜவ்ஹர் மார்க் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கூட்டத்தை கலைத்த போது போலீஸார் கேட் எண் 4,7 ஆகியவற்றின் பூட்டுகளை உடைத்துக் கொண்டும் அங்கு பணியில் இருந்த காவலர்களையும் அடித்தனர்.

மாணவரிகள் துன்புறுத்தல்
பின்னர் பூட்டியிருந்த நூலகத்தில் யாரேனும் வெளியாட்கள் மறைந்திருக்கின்றனரா என்பதை பார்க்க கதவுகள், ஜன்னல்களை உடைத்தனர். அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவர்களை அடித்துவிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

பார்வை இழப்பு
இது போல் போலீஸார் நுழைவதற்கு யாரும் அனுமதி வழங்கவில்லை. இது போன்று சற்றும் எதிர்பார்க்காத சம்பவத்தால் மாணவர்களுக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது, தடியால் போலீஸர் ஒரு மாணவரின் கண்களில் தாக்கியதால் அவருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் கண்ணீர் புகை குண்டு வீசியதால் சில மாணவர்களின் பார்வை இழந்துள்ளனர்.

நீதிவிசாரணை
எனவே போலீஸார் அத்துமீறி நுழைந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்த நிலையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications