வெள்ளத்தில் போன ஜம்மு காஷ்மீர் பிரதான பாலம்.. 12 மணி நேரத்தில் இரும்பு பாலத்தை கட்டிய ராணுவ வீரர்கள்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில், ஜம்முநகரில் பாயந்து செல்லும் தாவி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தின் சீற்றத்தால் ரூ.147 கோடியில் கட்டப்பட்ட (இருவழிச்சாலை) பாலத்தின் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டது. இதனால் அப்பாலத்தின் வழியே போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் அதில் இரும்பு பாலத்தை ராணுவ வீரர்கள் 12 மணி நேரத்தில் கட்டி முடித்தனர்.அந்த பாலத்தில் தற்போது மீண்டும் போக்குவரத்து தொடங்கி உள்ளது.

இமயமலையில் உள்ள ஜம்மு நகரம் மலை அடிவாரத்தில் உள்ள சமவெளிப்பகுதியாகும். அதேநேரம் ஸ்ரீநகர் உள்பட காஷ்மீர் முழுமையாக மலைப்பகுதிகளை கொண்டது. இங்கு மழைப்பெய்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

Jammu and Kashmir bridge washed away by floods Army soldiers build iron bridge in 12 hours

அந்த வகையில் காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள வாரன் பள்ளத்தாக்கில் கடந்த 27-ந் தேதி மேக வெடிப்பு ஏற்பட்டது. இதேபோன்று ராம்பன் மாவட்டத்தில் மேக வெடிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காஷ்மீரில் ஜம்மு, கதுவா, சாம்பா, பதான்கோட், குருதாஸ்பூர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக சேதமடைந்தன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளூர் போலீசாருடன் ஹெலிகாப்டர் உதவியோடு ராணுவத்தினரும் மீட்பு பணிளை செய்து வருகிறார்கள்.

தாவி நதியில் மேம்பாலம் உடைந்தது

ஜம்மு நகரிலும் கனமழையால் தாவி நதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தின் சீற்றத்தால் ரூ.147 கோடியில் கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டது. இதனால் அப்பாலத்தின் வழியே போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இது முக்கியமான வழித்தடம் என்பதால் அந்த வழியாக செல்ல முடியாமல் ஏராளமான வாகனங்கள் ஆங்காங்கே நின்றுவிட்டன.

ராணுவம் கட்டிய பாலம்

இந்நிலையில் கடும் மழைக்கு மத்தியில் விரைந்து செயல்பட்ட ராணுவ வீரர்கள் சேமடைந்த பாலத்தின் அருகே 110 மீட்டர் நீளத்தில் தற்காலிக 'பெய்லி' (இரும்பு) பாலத்தை அமைத்தனர். இந்த பாலத்தை 12 மணி நேரத்தில் ராணுவ வீரர்கள் கட்டி முடித்தனர். தற்போது அந்த பாலத்தின் வழியே போக்குவரத்து மீண்டும் தொடங்கியிருக்கிறது.

'பெய்லி' பாலம் என்றால் என்ன

பாலத்தின் பாகங்கள் முன்னரே தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டிருக்கும. கட்டுமான பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு விரைவாக ஒன்றிணைக்கப்படுவதே 'பெய்லி' பாலமாகும். இதுகுறித்து மேஜர் ஜெனரல் முகேஷ் பன்வாலா கூறுகையில், "ஜம்முவை இணைக்கும் முக்கிய பாலத்தின் கிழக்குப்பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டது. இதனை சரிசெய்ய நீண்ட நாட்கள் ஆகும்.. எனவே ராணுவ என்ஜினீயர்கள் 12 மணி நேரத்தில் 'பெய்லி' பாலத்தை அமைத்தனர். இதையடுத்து அதில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போக்குவரத்து சேவை தற்போது தொடங்கியிருக்கிறது.

நிவாரண முகாம்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விமானப்படை ஹெலிகாப்டருடன் ராணுவத்தினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டிருக்கிறார்கள். ஜம்மு-ஸ்ரீநகர் இடையேயான முக்கிய சாலையும் சேதமடைந்ததால் ஆப்டிகல் பைபர் கேபிள் அமைக்கப்பட்டு மருந்து, உணவு, பால் மற்றும் நிவாரணப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அங்குள்ள மக்களை ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+