Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜன நாயகனுக்கு விஜய் டெல்லியில் தரையிறங்கிய பிறகு வழக்கு எண்.. தற்செயலாக நடந்ததா அல்லது எப்படி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜனநாயகன் திரைப்படத்திற்கான சான்றிதழ் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு வழக்கு எண் வழங்கப்படாமல் இருந்த நிலையில், கரூர் துயர சம்பவத்தில் விஜய் சிபிஐ அலுவலகத்திற்கு ஆஜராவதற்கு சரியாக 21 நிமிடத்திற்கு முன்பு வழக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் விஜய் டெல்லியில் தரையிறங்கிய பிறகு வழக்கு எண் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை உயா்நீதிமன்றத்தில் கே.வி.என்.ப்ரோடக்சன் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 9-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தோம். ஆனால் படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க மறுத்த வாரியம் மறுஆய்வுக் குழுவுக்கு பரிந்துரை செய்தது. வாரியத்தின் உத்தரவை ரத்து செய்து, 'ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிந்தது..

jana nayagan after Vijay landed in Delhi case number Was it a coincidence or how did it happen

இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தபோது தணிக்கை வாரியம் தரப்பில், 'ஜனநாயகன்' படத்தில் மத ரீதியான ஆட்சேபணைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்புப் படை சின்னங்களும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்தப் படத்தை மறுஆய்வுக் குழு பாா்வையிட தணிக்கை வாரியத் தலைவா் உத்தரவிட்டுள்ளதாக வாதிடப்பட்டிருந்தது இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்த தனி நீதிபதி, 'ஜனநாயகன்' படத்தை கடந்த டிச. 22-ஆம் தேதி பாா்த்த தணிக்கைக் குழு உறுப்பினா்கள், படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தனா். அதன்பின்னா், உறுப்பினா்களில் ஒருவா் அளித்த புகாரின் அடிப்படையில் இந்தப் படத்தை மறுஆய்வுக் குழுவுக்கு தணிக்கை வாரியத் தலைவா் அனுப்பியுள்ளாா்.

சான்றிதழ் வழங்க தணிக்கைக் குழு உறுப்பினா்கள் பரிந்துரைத்த பின்னா், இந்த முடிவை வாரியத்தின் தலைவா் எடுத்துள்ளாா். தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்க பரிந்துரைத்த பின்னா் மறுஆய்வுக் குழுவுக்கு பரிந்துரை செய்யும் முடிவை எடுக்க அவருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி, தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா். மேலும், 'ஜனநாயகன்' படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால் தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சாா்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், தலைமை நீதிபதி அமா்வில் உத்தரவு வந்த சில நிமிடங்களிலேயே மேல்முறையீடு செய்தாா். இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் அவசர வழக்காக வெள்ளிக்கிழமை அன்றே விசாரித்தது. படத்தை வெளியிட தடை விதித்தது. இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன. 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

இதையடுத்து படத்தை பொங்கலுக்கே கொண்டுவர விரும்பிய பட தயாரிப்பு நிறுவனம், சென்னை உயா்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் தரப்பில் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கரூர் துயர சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் இன்று டெல்லியில் ஆஜராகினார். டெல்லியில் விஜய் தரையிறங்கிய பின்னர், ஜனநாயகன் வழக்கை விசாரிப்பபது தொடர்பாக வழக்கு எண் கொடுக்கப்பட்டிருக்கிறது.

jana nayagan after Vijay landed in Delhi case number Was it a coincidence or how did it happen

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மூத்த பத்திரிக்கையாளர் நிரஞ்சன், ஜனநாயகன் திரைப்படத்திற்கான சான்றிதழ் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு வழக்கு எண் வழங்கப்படாமல் இருந்த நிலையில், கரூர் துயர சம்பவத்தில் விஜய் சிபிஐ அலுவலகத்திற்கு ஆஜராவதற்கு சரியாக 21 நிமிடத்திற்கு முன்பு வழக்கு வழங்கப்பட்டிருக்கிறது.இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் விஜய் டெல்லியில் தரையிறங்கிய பிறகு வழக்கு எண் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+