டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போரிஸ் ஜான்சனை தொடர்ந்து.. இந்திய பயணத்தை அதிரடியாக ரத்து செய்த ஜப்பான் பிரதமர்.. காரணம் இதுதாங்க!

Google Oneindia Tamil News

டெல்லி: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை தொடர்ந்து ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகாவும் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார்.
இந்த பயணத்தின்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேச இருந்தார்.

Recommended Video

    Japan-ல் cyber தாக்குதல் நடத்திய China | Russia உருவாக்கும் Space Station | உயரும் China Economy

    கொரோனா தடுப்பு பணிகளில் பிரதமர் மோடி படுதோல்வி... மத்திய அரசு திணறல்... மு.க.ஸ்டாலின் விமர்சனம்..! கொரோனா தடுப்பு பணிகளில் பிரதமர் மோடி படுதோல்வி... மத்திய அரசு திணறல்... மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!

    இந்தியா முதலிடம்

    இந்தியா முதலிடம்

    உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது. அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ், இங்கிலாந்து என ஏறக்குறைய அனைத்து நாடுகளையும் பாரபட்சமில்லாமல் கொரோனா தாக்கி வருகிறது. அதுவும் உலக நாடுகளை எல்லாம் மிஞ்சும் வகையில் இந்தியா கடந்த சில வாரங்களாக கொரோனா தினசரி பாதிப்பில் முதலிடம் பிடித்து வருகிறது.

    இந்தியா போக யோசியுங்கள்

    இந்தியா போக யோசியுங்கள்

    இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ''இந்தியாவுக்கு செல்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை யோசியுங்கள்'' என்று நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையே ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக தனது பயணத்தை ரத்து செய்தார்.

     ஜப்பான் பிரதமர் பயணம் ரத்து

    ஜப்பான் பிரதமர் பயணம் ரத்து

    இந்த நிலையில் போரிஸ் ஜான்சனை தொடர்ந்து ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகாவும் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார். ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா அரசு முறை பயணமாக இந்த மாதம் இறுதி நாட்களில் இந்தியா வர திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பயணத்தின்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேச இருந்தார்.

    காரணம் என்ன?

    காரணம் என்ன?

    ஆனால் ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் யோஷிஹைட் சுகா தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார். தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடல்களில் சீனாவின் வளர்ந்து வரும் ஆக்கிரமிப்புகளுக்கு மத்தியில், சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை மேம்படுத்துவதற்கான பிராந்திய பாதுகாப்பு குறித்து விவாதிக்க ஜப்பான் பிரதமர் இந்தியா வரவிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Following in the footsteps of British Prime Minister Boris Johnson, Japanese Prime Minister Yoshihide Chouka has canceled his visit to India
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X