நேரூ டூ மோடி வரை.. இந்தியாவில் இதுவரை யார் யார் பிரதமராக இருந்துள்ளனர்.. இதோ லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் பிரதமராக மோடி இன்று 3-வது முறையாக பதவியேற்க உள்ள நிலையில், இந்தியாவின் பிரதமர்களாக இதுவரை யார் பதவி வகித்துள்ளனர் என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.

மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் நாட்டின் 18 வது லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் பிரதமர் மோடியின் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 272 இடங்களில் வெற்றி பெறவேண்டும் என்ற சூழலில் பாஜக 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால் தேசிய ஜனநாயக கூட்டணியால் தற்போது 3 வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கிறார்.

narendra modi bjp oath ceremony nda cabinet ministers

பிரதமராக மோடி இன்று 3-வது முறையாக பதவியேற்க உள்ள நிலையில், இந்தியாவின் பிரதமர்களாக இதுவரை யார் யார் பதவி வகித்துள்ளனர் என்பதை இங்கு பார்க்கலாம்.

* ஜவஹர்லால் நேரு (காங்கிரஸ்)
* குல்ஜாரிலால் நந்தா (தற்காலிகம்) (காங்கிரஸ்)
* இந்திரா காந்தி (காங்கிரஸ்)
* மொரார்ஜி தேசாய் (ஜனதா 2)
* சரண் சிங் (மதச்சார்பற்ற ஜனதாதளம்)
* ராஜீவ் காந்தி (காங்கிரஸ்)
* சந்திரசேகர் (சமாஜ்வாடி ஜனதா கட்சி)
* பி வி.நரசிம்ம ராவ் (காங்கிரஸ்)
* அடல் பிகாரி வாஜ்பாய் பாஜக
* தேவே கெளடா ஜனதாதளம்
* இந்தர் குமார் குஜ்ரால் (ஜனதாதளம்)
* மன்மோகன் சிங் (காங்கிரஸ்)
* நரேந்திர மோடி (பாஜக)

இதில், பிரதமர் பதவியில் நீண்ட காலம் பதவி வகித்தவர்கள் யார் யார் என்ற விவரங்களை பார்க்கலாம்.

ஜவர்ஹர்லால் நேரு:
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. இவர் 1947 ஆம் ஆண்டு முதல் 1964 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். இறக்கும் வரை ஜவஹர்லால் நேரு பிரதமராகவே இருந்தார். தனிப்பெரும்பான்மை பலத்துடன் மூன்று முறை ஜவஹர்லால் நேரு வெற்றி பெற்றார். ஜவஹர்லால் நேரு மொத்தமாக 16 ஆண்டுகள் 286 நாட்கள் பிரதமர் பொறுப்பில் இருந்தார்.

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும் கூட ஜவஹர்லால் நேரு கடும் சவாலை சொந்த கட்சிக்குள்ளும் சரி, பிற கட்சிகளுக்கும் சந்திக்க வேண்டியிருந்தது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டது, மகாத்மா காந்தியுடன் இணைந்து செயல்பட்டது ஆகியவற்றால் நேரு மிகவும் செல்வாக்கு மிக தலைவராக இருந்தார்.

நவீன இந்தியாவை கட்டமைப்பதில் நேரு முக்கிய பங்காற்றினார். பெரிய தொழிற்சாலைகள், அணைகள் ஆகியவற்றை நேரு கட்டமைத்தார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, சோவியத் யூனியன் - அமெரிக்கா இடையிலான பனிப்போர் கால கட்டத்தில் சுதந்திரமான கொள்கையை கடைபிடித்தார்.

இந்திரா காந்தி:
இந்தியவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி ஆவார். 1966 - 1977 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று முறை தேர்தலில் வெற்றி பெற்றார். 4- வது முறையாக 1980 ஆம் ஆண்டு பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 1984 ஆம் ஆண்டு கொல்லப்படும் வரை இந்திரா காந்தி பிரதமராகவே இருந்தார். 1964 ஆம் ஆண்டு நேரு மறைவுக்கு பிறகு இந்திரா காந்தி, தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

லால்பகதூர் சாஸ்திரி கேபினட்டில் இந்த பொறுப்பை வகித்தார். வறுமைக்கு எதிரான அவரது நடவடிக்கைகள், பசுமை புரட்சி, பாகிஸ்தானுடனான போர் ஆகியவற்றால் இந்திரா காந்தி இந்தியாவின் சக்தி வாய்ந்த பிரதமர்களில் ஒருவராக அறியப்பட்டார்.

நாட்டின் நெருக்கடி நிலையையும் இந்திரா காந்தி அறிமுகப்படுத்தினார். அப்போது போலீசாருக்கு சிறப்பு அதிகாரம் கொடுக்கப்பட்டது. பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். 1984 ஆம் ஆண்டு தனது இல்லத்தில் வைத்து இரண்டு பாதுகாவலர்களால் இந்திரா காந்தி கொல்லப்பட்டார்.

நரேந்திர மோடி:
அதிக காலம் பதவி வகித்த பிரதமர் பட்டியலில் மூன்றாம் இடத்தை மோடி பெற்றுள்ளார். 2014, 2019 ஆம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்ற மோடி, முன்றாவது முறையாக 2024லும் வென்றுள்ளார். கடந்த இரு முறையும் தனிப்பெரும்பான்மையுடன் வென்ற மோடி, இந்த முறை கூட்டணி ஆட்சி அமைக்கிறார். தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா, கிஷான் சமன் நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தார்.

மன்மோகன் சிங்:

கடந்த 2004 - 2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர் மன்மோகன் சிங். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரதமராக மன்மோகன் சிங் இருந்தார். கல்வி உரிமை சட்டம், நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அவரது ஆட்சி காலத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

10 ஆண்டுகள் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். நிதி அமைச்சகத்தின் செயலாளர், திட்ட கமிஷனின் துணை தலைவர், ரிசர்வ் வங்கியின் கவர்னர், பிரதமரின் ஆலோசர், யுஜிசி சேர்மன் என பல முக்கிய பொறுப்புகளையும் இவர் வகித்து இருக்கிறார்.

வாஜ்பாய்:
இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத ஒரு பிரதமர் முதல் முறையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்தவர் என்ற சிறப்பை பெற்றவர் வாஜ்பாய். பொஹ்ரான் அணுகுண்டு சோதனை, பாகிஸ்தானுடன் நல்லுறவை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டது ஆகியவை வாஜ்பாய்க்கு பெரும் புகழை சேர்த்தது. பாகிஸ்தானுடனான கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது வாஜ்பாயின் இமேஜை பெரிய அளவில் உயர்த்தியது.

இந்தியாவை அணு சக்தி நாடாக வாஜ்பாய் ஆட்சி காலத்திலேயே மாறியது. தங்க நாற்கர சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளும் இவரது ஆட்சி காலத்தில் மேம்படுத்தப்பட்டன. 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக வாஜ்பாய் இருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு தனது 93 வயதில் வாஜ்பாய் காலமானார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+