JEE Main Exam 2020: ஹால் டிக்கெட்... ஷூ...மாஸ்க்...சர்ட்டில் பெரிய பட்டன்...புதிய விதிகள்!!
டெல்லி: நாளை நடைபெறவிருக்கும் ஜேஇஇ மெயின் தேர்வுக்கு புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை, ஹால் டிக்கெட் ஆகியவற்றை கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். மாஸ்க், கையுறை ஆகியவற்றையும் கண்டிப்பாக எடுத்து வர வேண்டும் என புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் நாளை ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு நடக்கிறது. பல்வேறு எதிர்ப்புக்களையும் மீறி நாளை இந்தத் தேர்வு நடக்கிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை ஏற்கனவே வெளியிட்டு இருந்தது.

அடையாள அட்டை புரூப், கூடுதல் புகைப்படம், பால்பாயின்ட் பென், அட்டன்டென்ஸ் ஷீட்டில் கூடுதல் புகைப்படம் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும், தனிப்பட்ட சானிடைசர், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
Drawing Test - Part III of B.Arch. தேர்வு எழுத வரும் மாணவர்கள் சொந்த ஜியோமெட்ரி பாக்ஸ் கொண்டு வர வேண்டும். பென்சில், ரப்பர், கலர் பென்சில், கிரேயான்ஸ் கொண்டு வரவேண்டும். கண்டிப்பாக வாட்டர் கலர் மற்றும் டிராய்ங் சீட் கொண்டு வரக் கூடாது.
அடையாள அட்டையாக பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அட்டை, 12ம் வகுப்பு அட்மிட் கார்டு அல்லது பதிவு எண், பாஸ்போர்ட், ஆதார் கார்டு, இ ஆதார், ஆதார் கார்டு (புகைப்படம்), ரேஷன் கார்டு, ஆதார் ரோல் நம்பர் ஐடி புரூப் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்லலாம்.
செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள், தனிப்பட்ட வகையில் சொந்தமான பொருட்கள் எவற்றையும் எடுத்துச் செல்லக் கூடாது. செருப்பு, ஷூ ஆகியவற்றில் தடிமான உள்பாகம் இருக்கக் கூடாது. சர்ட்டில் பெரிய பட்டன் இருக்கக் கூடாது.
தேர்வு ஹாலுக்கு வரும்போது மாஸ்க் அணிந்து வர வேண்டும். ஹாலுக்கு வந்த பின்னர் அனைத்து மாணவ, மாணவிகளுக்கு மூன்று லேயர் மாஸ்க் வழங்கப்படும். தேர்வு ஹாலில் வழங்கப்படும் மாஸ்கை அணிய வேண்டும்.
மாணவர்கள் கொண்டு வரும் ஹால் டிக்கெட் நுழைவு வாயிலில் பரிசோதிக்கப்படும். அதன் பின்னர் அந்த ஹால் டிக்கெட்டை அங்கு வைக்கப்பட்டு இருக்கும் பாக்ஸில் போட வேண்டும். ரப் சீட் கொண்டு வந்து இருந்தாலும், அதே பாக்ஸில் போட்டு விட வேண்டும். பாக்ஸில் போடுவதற்கு தவறும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications