14 பேர் முழு மதிப்பெண்கள்.. ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது!
டெல்லி: ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படும் நுழைவுத்தேர்வான ஜே.இ.இ. முதன்மை தேர்வு முடிவு இன்று வெளியானது. இந்த தேர்வில் மொத்தம் 14 பேர் முழு மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://jeemain.nta.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு ஜே இ இ (Joint Entrance Examination) என்பது இந்தியாவில் உள்ள ஐஐடி மற்றும் என் ஐடி போன்ற பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வாகும். இதில் முதன்மை தேர்வு மற்றும் அட்வான்ஸ்டு எனப்படும் மேல் நிலை தேர்வு என இரு பிரிவாக நடத்தப்படுகிறது.

இதில் முதன்மை தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பு 2025 டூ 2026 ஆம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல் கட்ட முதன்மை தேர்வு கடந்த ஜனவரி 22 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை நாடு முழுவதும் 618 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. மொத்தம் 12.58 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர்.
இந்த நிலையில் இன்று இந்த தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. இதில் மொத்தம் 14 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை சுனய் யாதவ் என்ற மாணவர் தேசிய அளவில் 25 வது இடத்தை பிடித்துள்ளார். அவர் 99.99 சதவீதம் மதிப்பெண் பெற்றார். தேர்வு எழுதியவர்கள் தங்களது முடிவுகளை கீழ்க்கண்ட இந்த இணையதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம். https://jeemain.nta.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று தேர்வு முடிவுகளை பார்த்துக்கொள்ளலாம்.
இதேபோன்று தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக 39 மாணவர்களின் முடிவுகளானது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மாணவர்கள் அறிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் www.nta.ac.in செய்து தெரிந்துகொள்ளலாம். மேலும் தேர்வு முடிவு தொடர்பான சந்தேகங்களுக்கு 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண்ணிலும், இந்த [email protected] மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications