ஆதிக்கம் செலுத்தும் கொரோனா.. ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு.. புதிய அட்டவணை எப்போது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால் ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெஇஇ மெயின் தேர்வுகான புதிய அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

JEE Main exams will be postponed as the covid 19 impact is high across the country

இந்தியாவில் கடந்த ஆண்டு முழுவதும் மக்களை பாடாய்படுத்திய கொரோனா இந்த முறை அதைவிட மிக மோசமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வரும்போதிலும் கொரோனா தொடர்ந்து அடங்க மறுக்கிறது. கொரோனா ஆதிக்கம் காரணமாக பெரும்பாலான மாநிலங்கள் பள்ளி, கல்லூரிகளை மூடியுள்ளன.

பள்ளி பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. கொரோனா தொற்று ஆதிக்கம் அதிகமாக இருந்து வருவதால் சிபிஎஸ்இ நடத்தும் 10-ம் வகுப்பு தேர்வு அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. சிபிஎஸ்இ நடத்தும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதேபோல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவிருந்த முதுகலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஏப்ரல் 27-ஆம் தேதி மற்றும் ஏப்ரல் 28 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெற இருந்தது. ஜெஇஇ மெயின் தேர்வுகான புதிய அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஏற்கனவே இரண்டு கட்டமாக நடந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+