ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள்...இன்று வெளியாகிறதா...எங்கு எப்படி பார்க்க வேண்டும்!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் இன்று இன்னும் சில மணி நேரங்களில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளியானவுடன் தேர்வு எழுதி இருப்பவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று தங்களது தேர்ச்சியை கண்டறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேஇஇ மெயின் தேர்வை எழுத நாடு முழுவதிலும் இருந்து சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பதிவு செய்து இருந்தனர். கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் அனைத்து தரப்பிலும் இருந்து கோரிக்கை எழுந்தது. ஆனாலும், தேசிய தேர்வு முகமை தேர்வை நடத்தியது.

JEE Main Result 2020 may out today how to see the results

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்த கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ''அரசு மீது நம்பிக்கை வைத்திருந்து தேர்வு எழுதி இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விடைத்தாள் திருத்தும் பணி துவங்கிவிட்டது. விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும்'' என்று நேற்று முன்தினம் பதிவு செய்து இருந்தார்.

விடைத்தாளை கடந்த செவ்வாய் கிழமை nta.ac.in and jeemain.nta.nic.in. ஆகிய இணையதளங்களில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டு இருந்தது. தேர்வு எழுதியவர்கள் தங்களது விண்ணப்ப எண், பாஸ்வேர்டு, பிறந்த நாள் ஆகியவற்றை வைத்து விடைத்தாளை செக் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவை இவ்வாறு பார்க்க வேண்டும்.

  • jeemain.nta.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்துக்கு செல்லவும்
  • JEE Mains 2020 results என்பதை கிளிக் செய்யவும்
  • புதிய விண்டோ திறக்கும்.
  • உங்களுடைய மெயில் ஐடி பதிவிட்டு லாக் இன் செய்யவும்
  • உங்களது தேர்வு முடிவு குறித்த தகவல் வெளியாகும்
  • டவுன்லோடு செய்து பிரின்ட்அவுட் எடுத்துக் கொள்ளவும்

செல்போனில் செக் செய்ய:

  • jeemain.nic.in என்ற இணையதளத்துக்கு செல்லவும்
  • View Result/Scorecard என்று இருப்பதை கிளிக் செய்யவும்
  • புதிய பக்கத்திற்கு எடுத்து செல்லும். விண்ணபப் எண், பிறந்த நாள் பதிவு செய்யவும்
  • செக்யூரிட்டி எண் பதியவும்
  • லாக் இன் கிளிக் செய்யவும்
  • ஜேஇஇ மெயின் தேர்வு முடிவை செக் செய்யவும்

ஜேஇஇ மெயின் தேர்வு எழுதுவதற்கு பதிவு செய்து இருந்த 26% பேர் தேர்வு எழுதவில்லை. முதல் மூன்று நாட்கள் நடந்த தேர்வை எழுதுவதற்கு 1,14,563 பேர் வரவில்லை. மொத்தம் பதிவு செய்து இருந்த 8.58 மாணவர்களில், 6.35 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதி இருந்தனர். கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை தேர்வு நடந்து இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+