உ.பி. மருத்துவமனை தீ விபத்தில் பலியான 10 பிஞ்சுகள்.. நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி, முதல்வர் யோகி!
டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் உயர் சிகிச்சை மையத்தில் நேற்று நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு சுமார் 10.35 மணியளவில் மருத்துவமனையின் இரு அறைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த 10 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த மையத்தில் மொத்தம் 54 குழந்தைகள் இருந்த நிலையில், 37 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். 7 குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் ஆக்சிஜன் அதிகமாக இருந்த காரணத்தால் அந்த உயர் சிறப்பு சிகிச்சை மையத்தில் தீ உடனடியாக பரவி இருக்கலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேச அரசு இந்தக் கோரச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஜான்சியில் நடந்த கோர தீ விபத்து சம்பவத்தில் 10 பிஞ்சுகள் பலியாகியுள்ள நிலையில், நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 10 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்து நெஞ்சை உலுக்கியுள்ளது. அப்பாவி குழந்தைகளை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களுக்கு இந்த துயரத்தை தாங்கும் சக்தியை தர இறைவனை பிரார்த்திக்கிறோம்.
உ.பி மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், உள்ளூர் நிர்வாகம் நிவாரணம் மற்றும் மீட்புக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜான்சி மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications