Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜார்க்கண்டில் நூழிலையில் பந்தயம் அடிக்கும் இந்தியா கூட்டணி.. எலக்ட்ரால் எட்ஜ் கருத்துக் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பாஜக கூட்டணிக்கும், ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுவதாக கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எலக்ட்ரால் எட்ஜ் கருத்துக் கணிப்பின்படி ஜேஎம்எம் இந்தியா கூட்டணி நூழிலையில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான முக்தி மோர்சா கட்சி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளன. ஜார்கண்ட் மாநில சட்டபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல், ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்களுக்கு பிறகு இந்த இரண்டு மாநிலங்களுக்கான தேர்தல் நடந்துள்ளதால், இதற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

exit poll 2024 jharkhand exit polls 2024 2024

எதிர்க்கட்சி வரிசையில் பாஜக உள்ளது. ஜார்கண்டில் இந்த முறை வென்றே ஆக வேண்டும் என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். அதேபோல, கடந்த முறை பறித்த வெற்றிக் கனியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணி.

ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளன. 43 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 13 ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 38 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்றும் (நவம்பர் 20 ஆம் தேதி) நடந்துள்ளது. நவம்பர் 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. முதல் கட்ட வாக்குப்பதிவில் 64.86 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தற்போது வெளியாகி வருகின்றன. பெரும்பான்மைக்கு 41 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஜேஎம்எம் மீண்டும் ஆட்சியில் அமருமா அல்லது பாஜக ஆட்சியைக் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்துக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு எக்ஸிட் போல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. அதன்படி, எலக்ட்ரால் எட்ஜ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி 32 இடங்களைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 42 இடங்களையும், மற்றவை 7 இடங்களையும் பிடிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்டில் பாஜக கூட்டணி 35 சதவீத வாக்குகளுடன் 29 சீட்டுகளையும், ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணி 25 சதவீத வாக்குகளுடன் 29 சீட்டுகளையும், ஓடிஎச் 20 சதவீத வாக்குகளுடன் 7 இடங்களையும், ஐஎன்சி 15 சதவீத வாக்குகளுடன் 13 இடங்களையும், ஏஜேஎஸ்யூ 5 சதவீத வாக்குகளுடன் 3 சீட்டுகளையும் தக்க வைக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெறவில்லை. அதிகபட்சமாக ஜேஎம்எம் கட்சி 30 சீட்களில் வென்றது. காங்கிரஸ் 16 தொகுதிகளைக் கைப்பற்றி இருந்தது. இதனால் இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியை அமைத்தது. இந்நிலையில், இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவுவதால் ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணி நூழிலையில் ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+