ஜார்கண்ட்டில் காங். கூட்டணி அபாரம்.. மற்றொரு மாநிலத்தையும் இழந்தது பாஜக.. இதோ மேப்!
டெல்லி: பாஜக ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை வரவர குறைந்து கொண்டே வருகிறது. 2 வருடங்களுக்கு முன்பு நாட்டின் 71 சதவீத பகுதியை ஆட்சி செய்த பாஜக, இப்போது 40 சதவீத இடங்களுக்கும் குறைவாக ஆட்சி செய்யும் அளவுக்கு வந்துள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான, காங்கிரஸ் கட்சி எப்போதும் இல்லாத அளவுக்கு சமீப காலமாக மிகவும் பலவீனமாக தோற்றமளிக்கிறது. அக்கட்சி அடுத்தடுத்து 2 லோக்சபா பொதுத் தேர்தல்களில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இன்னும் அதற்கு ஒரு நிரந்தர தலைவரை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றொருபக்கம் பாஜக பலமிக்க கட்சியாக உருவெடுத்துள்ளது. அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் ஆளுமையால் அக்கட்சி 2 லோக்சபா தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றியை ருசித்துள்ளது. 2014ல் முதல் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, பல மாநிலங்களிலும் அக்கட்சி ஆட்சியை பிடிக்க துவங்கியது.

21 மாநிலங்கள்
2014ம் ஆண்டு 7 மாநிலங்களில் ஆட்சியில் இருந்த அந்த கட்சி, 2018ல் அபாரமாக 21 மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது. அதில் சில மாநிலங்களில் கூட்டணி ஆட்சியும் உண்டு. மோடி அலை என்றும், அமித்ஷாவின் அரசியல் சாணக்கியத்தனம் என்றும் இந்த வெற்றிகளுக்கு காரணம் கூறினர் பாஜக ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் நோக்கர்கள்.

காவி நிறம்
இதன் காரணமாக இந்திய அரசியல் வரைபடத்தில், பெரும்பாலான பகுதிகளில் காவி வண்ணமாகவே காட்சியளித்துக் கொண்டிருந்தது. 2018ம் ஆண்டு பாஜக ஆளாத மாநிலங்கள் எவை என பட்டியலிடும் அளவுக்கு அக்கட்சி முன்னேறியது. அக்காலகட்டத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா, மிசோராம், பஞ்சாப், ஒடிசா, மேற்கு வங்கம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மட்டுமே பாஜக கூட்டணி ஆட்சியில் இல்லாமல் இருந்தது.

விரிவடைந்த ஆட்சி
2015ல் 13 மாநிலங்கள், 2016ல் 15 மாநிலங்கள், 2017ல் 19 மாநிலங்கள், 2018ல் 21 மாநிலங்கள் என பாஜக ஆட்சி விரிவடைந்து கொண்டே சென்றது. ஆனால் பிறகுதான் நிலைமை மாறத்தொடங்கியது. எதிர்பார்க்காத அசாமில் வெற்றி பெற்ற பாஜகவால், அதன் பலமிக்க பகுதிகளான மத்திய பிரதேசம், ராஜஸ்ஸதான், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் வெல்ல முடியவில்லை. ஆந்திராவில், கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் பாஜகவைவிட்டு பிரிந்தது. பாஜக கூட்டணி உடைந்ததால், கடந்த டிசம்பர் முதல் ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.
|
மகாராஷ்டிரா
2019ல் மத்தியில் மோடி அரசு மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தாலும், மாநிலங்களில் அதன் பிடி நழுவி வருகிறது. கர்நாடகாவில், அரசியல் ஆபரேஷன் மூலமாக பாஜக ஆட்சிக்கு வந்திருந்தாலும், மகாராஷ்டிராவில், அது ஆட்சியை பறி கொடுத்துள்ளது. இப்போது ஜார்கண்ட்டிலும் ஆட்சியை காங்கிரஸ் கூட்டணியிடம் இழந்துள்ளது. எனவே, பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை 16ஆக குறைந்துள்ளது.
|
சிறு மாநிலம்
பூகோள அடிப்படையில் பார்த்தால், பாஜக தொடர்ந்து பெரிய மாநிலங்களை இழந்து வருகிறது. சிறிய மாநிலங்களில் வெல்ல முடிகிறது. ஆனால் இப்போது ஜார்கண்ட் போன்ற சிறு மாநிலத்தையும் இழந்துள்ளது. அதேநேரம், வாக்கு சதவீதத்தை பொறுத்தளவில், பாஜகவுக்கு இங்கு பெரிய இழப்பு இல்லை.
இப்போதைய நிலவரப்படி, நாடு முழுக்க பாஜக ஆளக்கூடிய நிலப்பரப்பு என்பது 40 சதவீதத்திற்கு குறைவாக உள்ளது. முன்பு இது 71 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதை இந்த வரைபடம் எடுத்துக் காட்டுகிறது.
-
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. 11 டூ 11 பார்களுக்கு செக்.. அரசு அதிரடி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு












Click it and Unblock the Notifications