ஜியோவில் இனி ஐபிஎல் இலவசம் தொடருமா? அம்பானி இறக்கிய "பிளான் B.." வாயடைத்து போன போட்டியாளர்கள்
டெல்லி: டெலிகாம் துறையை மொத்தமாக மாற்றிப் போட்ட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்தகட்டமாக இப்போது ஓடிடி பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளது.
நமது நாட்டில் ஓடிடியை பார்ப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஜியோ நிறுவனம் தனது ஜியோ சினிமா தளத்திற்கு இப்போது இரண்டு அட்டகாசமான திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

முதல் திட்டம் வெறும் ரூ.29க்கு இருக்கிறது. இதில் ஒரு நேரத்தில் ஒரு ஸ்கிரீனில் மட்டும் நாம் ஸ்டிரீம் செய்யலாம். அடுத்தது பேமிலி பேக்.. அதன் விலை வெறும் ரூ.59க்கு கிடைக்கிறது. இதில் நாம் ஒரே நேரத்தில் 4 ஸ்கிரீன்களில் படங்களைப் பார்க்க முடியும்.
சிறப்பு சலுகை: அதேநேரம் சிறப்புச் சலுகையாகவே இந்த ரேட்டில் பிளான்களை அறிமுகப்படுத்தி உள்ளனர். இந்த சலுகை காலம் முடிந்ததும் தனிநபருக்கான கட்டணம் ரூ.59 மற்றும் பேமிலி பேக் கட்டணம் ரூ.149ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டு ஜியோ பிரீமியம் ஆண்டு சந்தா 999 ரூபாய்க்குத் திட்டத்தை அறிவித்து இருந்தது. இந்த ஆண்டு சந்தா முறையை நீக்கிவிட்டு இப்போது மாதம் ஒரு முறை சந்தா செலுத்தும் முறையை ஜியோ அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த ஜியோ பிரீமியம் கீழ் நாம் 4K தரத்தில் வீடியோ பார்க்கலாம். அத்துடன் வீடியோக்களை ஆப்லைன் செய்து பார்க்கும் வசதியும் இருக்கும். விளையாட்டு மற்றும் லைவ் நிகழ்வுகளைத் தவிர அனைத்தையும் நாம் விளம்பரம் இல்லாமல் பார்க்க முடியும்.
இலவசம் தொடரும்: இப்போது ஜியோ நிறுவனம் விளம்பரத்துடன் இலவச சேவையையும் வழங்கி வருகிறது. அதில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாகப் பார்க்கலாம். மேலும் பெரும்பாலான பிராந்திய மொழி கன்டெண்டுகளை இலவசமாகப் பார்க்க முடியும். அந்த சேவை இதன் பின்னரும் தொடர்ந்து இருக்கும் எனறே இப்போது ஜியோ தரப்பில் கூறப்படுகிறது. இந்த ஜியோசினிமா பிரீமியம் என்பது முக்கியமாக ஆங்கிலம் உள்ளிட்ட சர்வதேச கன்டென்டுகளை பார்க்கவே முக்கியமானதாக இருக்கும்.
ஓடிடி சந்தை: இந்தியாவில் ஓடிடி சந்தையில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், ஜியோ நிறுவனத்தின் இந்த நடவடிக்கை மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. நெட்ஃபிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார் என போட்டி கடுமையாக இருக்கும் நிலையில், ஜியோ சினமா பெரியளவில் சந்தையைப் பிடிக்க முடியாமல் இருந்தது. இந்தச் சூழலில் ஜியோ இறக்கியுள்ள இந்த அதிரடி நடவடிக்கை அதன் சந்தாதார்களின் எண்ணிக்கையை நிச்சயம் அதிகரிக்கும் என்றே ஜியோ நம்புகிறது.
சரி, இப்போது இருக்கும் ஓடிடிக்களில் எது மிகவும் குறைவானது என்றால் அது ஜியோ தான்.. மாதத்திற்கு வெறும் ரூ. 29 ஜியோசினிமா பிரீமியம் திட்டம் நமக்குக் கிடைக்கிறது. இந்தளவுக்குக் குறைந்த பிளான் வேறு எதிலும் இல்லை. அடுத்து இருப்பது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் திட்டமாகும். இது சுமார் ரூ.49க்கு கிடைக்கிறது. இருப்பினும், இதில் விளம்பரங்கள் வரும். மேலும், மொபைலில் மட்டும் நம்மால் பார்க்க முடியும். ஆனால் ஜியோவை டிவியிலும் பார்க்கலாம். விளம்பரங்களும் வராது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அள்ளித் தரும் ஜியோ.. 12 ஓடிடி தளங்களை ஃப்ரீயா பார்க்கலாம்.. வெறும் ரூ.148.. டேட்டாவும் இலவசம்! ஆஹா!
எது பெஸ்ட்: அடுத்து இருப்பது அமேசான் பிரைம் லைட்.. இதில் நாம் மாதம் ரூ. 67ஐ செலுத்த வேண்டும். மொபைலில் மட்டும் நம்மால் கன்டென்ட்களை பார்க்க முடியும். மேலும் விளம்பரங்கள் வரும் இருப்பினும், அமேசான் தளத்தில் இலவச டெலிவரி, பாஸ்ட் உள்ளிட்ட சலுகைகள் நமக்குக் கிடைக்கும் என்பதால் இது ஓரளவுக்கு நல்ல திட்டமாகவே இருக்கிறது.
இதில் காஸ்ட்லி என்றால் அது நெட்ஃபிக்ஸ் தான். இதில் ஆரம்ப திட்டமே ரூ. 149.. அதேநேரம் அவ்வளவு கொடுத்தாலும் நாம் மொபைலில் மட்டும் பார்க்க முடியும். 480p தரத்தில் தான் பார்க்க முடியும். ஆனால், விளம்பரங்கள் எதுவும் வராது என்பது ஒரு நல்ல செய்தி.
ஜியோ: டெலிகாம் துறையில் நுழையும் போது எவ்வடி அனைத்தும் இலவசம் என்று சொல்லி சந்தையைப் பிடித்தார்களோ.. அதேபோல இப்போது மிகவும் குறைந்த விலைக்குத் திட்டங்களை அளித்து ஓடிடி சந்தையையும் பிடிக்க ஜியோ திட்டமிட்டுள்ளது. அது நடக்குமா என்பது இன்னும் கொஞ்சக் காலத்தில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications