ம.பி. காங். தோல்விக்கு காரணமான கமல்நாத் ராஜினாமா ஏற்பு- புதிய மாநில தலைவராக ஜீத்து பட்வாரி நியமனம்!
டெல்லி: மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்குப் பொறுப்பேற்று மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக முன்னாள் முதல்வர் கமல்நாத் அனுப்பிய கடிதத்தை டெல்லி மேலிடம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனையடுத்து மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஜீத்து பட்வாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 17-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மத்திய பிரதேச தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்து கணிப்புகள், அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியை பறிகொடுக்கும்; மிக மோசமான தோல்வியைத் தழுவும் என தெரிவித்திருந்தன. ஆனால் தேர்தல் முடிவுகளோ தலைகீழாக மாறின. ஆட்சியில் இருந்த பாஜக பெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. மொத்தம் 163 இடங்களை பாஜக பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 63 இடங்கள்தான் கிடைத்தது.

காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும் முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் அணுகுமுறைகளால்தான் அக்கட்சி தோல்வியைத் தழுவியதாக மூத்த தலைவர்கள் பலரும் குற்றப்பத்திரிகை வாசித்தனர். இதனால் வேறுவழியே இல்லாமல் மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை கமல்நாத் ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஏற்றுக் கொண்டார். அதேநேரத்தில் கமல்நாத் மீது டெல்லி மேலிடம் அதிருப்தி அடைந்ததாகவும் டெல்லி மேலிடத்தின் உத்தரவாலேயே கமல்நாத் தமது பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்பட்டது.
#WATCH | Indore: Party workers celebrated outside Congress leader Jitu Patwari's residence after he was appointed as President of Madhya Pradesh Congress Committee (16/12) pic.twitter.com/An8ZmmbuSH
— ANI (@ANI) December 16, 2023

இதனைத் தொடர்ந்து ம.பி. மாநிலா காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக ஜீத்து பட்வாரியை நியமித்துள்ளார் மல்லிகார்ஜூன கார்கே. இதனை ஜீத்து பட்வாரி ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். மத்திய பிரதேசத்தில் 70 வயதாகும் கமல்நாத், பாஜகவுக்கு எதிராக கடும் போக்கு கொண்டவராக செயல்படாமல் மிதவாத இந்துத்துவா கோட்பாடுகளை கையில் எடுத்தது விமர்சனத்துக்குள்ளானது. தற்போது 50 வயதாகும் ஜீத்து பட்வாரி நியமனம் மூலம் ம.பி. காங்கிரஸுக்கு புதிய உத்வேகம் கிடைக்கும் என்பது டெல்லி மேலிடத்தின் நம்பிக்கை.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications