ஜேஎன்யூவில் கொடூரமாக தாக்கப்பட்ட மாணவர்கள்.. நாடு முழுவதும் போராட்டம் நடத்த மாணவ அமைப்பினர் திட்டம்!
ஜேஎன்யூவில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்த நாடு முழுக்க இன்று பல்வேறு மாணவ அமைப்பினர் போராட்டம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
Recommended Video
டெல்லி: ஜேஎன்யூவில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுக்க இன்று பல்வேறு மாணவ அமைப்பினர் போராட்டம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஜேஎன்யூ நேற்று நடந்த கலவரத்திற்கு பின் ரத்தக்களமாக மாறியுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் தாக்கப்பட்டது நாடு முழுக்க விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த தாக்குதலை நடத்தியது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மாணவர்கள் மிக மோசமாக காயம் அடைந்தனர். 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

என்ன போராட்டம்
இதற்கு எதிராக மாணவர்கள் போராட திட்டமிட்டுள்ளனர். நாடு முழுக்க இருக்கும் ஐஐடி கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பேரணி நடத்த உள்ளனர். மும்பை, சென்னை, டெல்லி, கோரக்பூர் ஐஐடி, பெங்களூர் ஐஐஎஸ்டி மாணவர்கள் எல்லோரும் போராட்டம் செய்ய உள்ளனர். மும்பையில் போராட்டம் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

எங்கு எல்லாம் போராட்டம்
அதேபோல் கொல்கத்தாவிலும், மும்பையிலும், ஹரியானாவில் உள்ள மற்ற பல்கலைக்கழக மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் இன்று போராட்டம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த போராட்டம் நாடு முழுக்க மிகப்பெரிய அளவில் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோசமான தாக்குதல்
இந்த தாக்குதலை நடத்தியது ஏபிவிபி எனப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவ பிரிவை சேர்ந்த அமைப்பு ஆகும். இவர்கள்தான் முகத்தை மூடிக்கொண்டு மாணவர்களை தாக்கியதாக புகார் வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இதற்கு பின் வேறு சிலர் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தமிழகம் எப்படி
தமிழகத்திலும் இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். சென்னையில் மாணவ அமைப்புகள் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளது. எஸ்எப்ஐ, ஏஐசிஎப் ஆகிய அமைப்புகள் பெரிய அளவில் போராட்டங்களை நடத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications