மோடி, அமித்ஷாவுக்கு எதிராக கோஷம் போட்ட.. மாணவர்கள் மீது FIR! ஜேஎன்யுவில் மீண்டும் சலசலப்பு
டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, கடந்த 5ம் தேதி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருக்கு எதிராக, முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக கூறி, பல்கலைக்கழக நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறது. இதனை தொடர்ந்து மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த 2020ம் ஆண்டு ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இந்த வளாக வன்முறை நினைவாகவும், காயமடைந்த மாணவர்களுக்கும், ஜாமீன் மறுக்கப்பட்ட சமூக ஆர்வலர்களான உமர் காலித், ஷர்ஜில் இமாம் ஆகியோருக்கு ஆதரவாகவும் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இதில்தான் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது.

புகார் கொடுத்த பல்கலைக்கழகம்
இது குறித்து ஜேஎன்யு நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. புகாரின் அடிப்படையில், தற்போதைய பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் அதிதி மிஸ்ரா உட்பட சில மாணவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பல்கலை நிர்வாகம் இது குறித்து கூறுகையில்,
"கோஷங்களை எழுப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது ஏற்றுக்கொள்ள முடியாத, வெறுப்பை தூண்டும் கோஷங்கள். இவை திட்டமிட்டு தொடர்ச்சியாக நடக்கின்றன. இப்படியான சம்பவங்கள் பொது ஒழுங்கு, வளாக நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடியவை. பல்கலைக்கழகங்கள் வெறுப்பின் கூடாரங்களாக மாற அனுமதிக்கக் கூடாது. அவை புதிய சிந்தனைகளின் மையங்களாகத் திகழ வேண்டும்" என்று கூறியுள்ளது.
மறுக்காத மாணவர் சங்கம்
மறுபுறம் மாணவர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த வளாக வன்முறை நினைவாகவும், காயமடைந்த மாணவர்களுக்கும், ஜாமீன் மறுக்கப்பட்ட சமூக ஆர்வலர்களான உமர் காலித், ஷர்ஜில் இமாம் ஆகியோருக்கு ஆதரவாகவும் இந்த கவன ஈர்ப்பு இயக்கம் நடந்ததாகக் கூறியது. எனினும், கோஷம் எழுப்பியதை சங்கம் மறுக்கவில்லை.
வழக்குப்பதிவு
காவல்துறை தரப்பில் கூறுகையில், "இத்தகைய கோஷங்கள் ஜனநாயக எதிர்ப்பு கொண்டவை. இது ஜேஎன்யுவின் நடத்தை விதிகளை மீறுவதோடு, பொது ஒழுங்கு, வளாக நல்லிணக்கம் மற்றும் பல்கலைக்கழக பாதுகாப்பைப் பாதிக்கும்" என வசந்த் குஞ்ச் (வடக்கு) காவல் நிலையத்திற்கு தலைமை பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார். எனினும், FIR பதிவு செய்யப்பட்டதை காவல்துறை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
அமைச்சர்கள் கண்டனம்
பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு எதிரான கோஷங்களை டெல்லி மற்றும் மத்திய அமைச்சர்கள் கடுமையாகக் கண்டித்தனர். டெல்லி கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட், "பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராக தனிப்பட்ட, வன்முறைப் பேச்சுக்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்றார். தொழிலாளர் நல அமைச்சர் கபில் மிஸ்ரா, கோஷங்களை எழுப்பிய மாணவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா நீதிமன்ற தீர்ப்புகளை எதிர்ப்பது அமைப்பையே சீர்குலைக்கும் என்றும் கூறியுள்ளார்.
மாணவர்களின் குற்றச்சாட்டு
மத்திய அமைச்சர்களான கிரண் ரிஜிஜு, பியூஷ் கோயல், கிரிராஜ் சிங் ஆகியோரும் பிரதமர் மோடிக்கு எதிரான கோஷங்களை வன்மையாகக் கண்டித்தனர். எனினும், இந்த கவன ஈர்ப்பு இயக்கம், பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே நடந்தது என ஜேஎன்யு மாணவர் அமைப்பு விளக்கமளித்துள்ளது. எதிர்ப்பை நசுக்க அதிகாரிகள் முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
"முகமூடி அணிந்த குண்டர்களால் மாணவர்கள் மீது நடந்த தாக்குதல்கள், முரண்பட்ட குரல்களுக்கு எதிராக தொடுக்கப்படும் வன்முறையை ஒடுக்குவதற்கு பதிலாக, கவனத்தைத் திசைதிருப்ப ஒரு திட்டமிட்ட முயற்சி நடக்கிறது" மாணவர் சங்கம் கூறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications