கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் இன்றும் போராட்டம்
Recommended Video
டெல்லி: விடுதி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் (ஜேஎன்யூ) இன்றும் போராட்டம் நடத்தினர்.
ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தில் விடுதி கட்டண உயர்வுகள் 300% அதிகரிக்கப்பட்டுள்ளன என்பது மாணவர்களின் புகார். இந்த கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்களை மாணவர்கள் நடத்தி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்னர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்ற பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பல மணிநேரம் நீடித்த இப்போராட்டத்தால் தெற்கு டெல்லியே போர்க்களமானது.
போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் மாணவர்கள் கலையாமல் போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில் பல்கலை கழகத்துக்குள் ஒன்று திரண்டு மாணவர்கள் போராட்டத்தை நடத்தினர். பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெறும் இடங்களில் இந்த போராட்டத்தை மாணவர்கள் நடத்தினர். தங்களுடன் பல்கலைக் கழக துணைவேந்தர் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்றும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் இன்றும் ஜே.என்.யூ. பல்கலைக் கழக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
ஏபிவிபி போராட்டம்
இதேபோல் இன்று ஏ.பி.வி.பி. மாணவர் சங்கத்தினரும் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர். சில மாணவர்கள் கோரிக்கைகளை சுவர்களில் நின்று பதாகைகளை ஏந்தியபடி முழக்கமிட்டனர்.
Delhi: Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP) holds protest outside University Grants Commission (UGC) against fee hike. pic.twitter.com/YgF7fjoocu
— ANI (@ANI) November 13, 2019
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications